சனி, 14 மார்ச், 2009

எப்படி வந்தது குண்டக்கமண்டக்க, ஒக்கமக்கா

நாம் அன்றாடம் காணும் சினிமாவிலும், மற்றும் சமுதாயத்திலும் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தை ஒக்கமக்கா, குண்டக்கமண்டக்க, அதுபோல் கொய்யால மற்றும் டகால்டி என்ற வார்த்தைகள் எப்படி வந்தது என்று பார்போம், இது ஒரு கற்பனைதான், எந்த அகராதியில் கண்டு பிடித்தாய் என்று தயவு செய்து கேட்க கூடாது, கற்பனை பொருத்தமாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.

குண்டக்கமண்டக்க, ஒக்கமக்கா

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தது ஒரு குண்டான பெண்பிள்ளை, இரண்டாவது ஒல்லியான பெண்பிள்ளை ,மூன்றாவது ஆண் பிள்ளை, இந்த மூன்றுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தார்கள், இவர்கள் எப்பொழுதும் பள்ளிக்கூடம் போனால் ஒன்றாகத்தான் சேர்ந்து போவார்கள். இதில் அதிக புத்திசாலி ஒல்லியானபெண், மூத்த பெண் நன்றாக படிக்காது, அதனால் அந்த பெண்ணை எல்லோரும் மண்டு என்றுதான் சொல்வார்கள், பள்ளிகூடத்தில் கேள்வி கேட்டால் தவறாகத்தான் பதில் சொல்லும், ஆனால் இரண்டாவது பெண் நன்றாக பதில் சொல்லும், ஒருநாள் இரண்டாவது பெண் ஆசிரியர் கேள்வி கேட்கும் பொழுது தவறாக பதில் சொல்லிவிட்டது, அதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், உங்க அக்கா குண்டு அக்கா மண்டு அக்கா மாதிரி பதில் சொல்லாதே என்று ஆசிரியர் சொல்ல , அது முதல் அது மருவி குண்டக்க மண்டக்க (குண்டு அக்கா மண்டு அக்கா) என்று ஆகிவிட்டது, இதுதான் குண்டக்க மண்டக்க கதை, அது மாதிரி ஒக்கமக்க எப்படி வந்தது என்றால், அந்த குண்டான அக்காவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள், அந்த அக்கா ஒருமுறை மாப்பிள்ளையோடு வீட்டிற்கு வந்து இருந்தபொழுது , மாப்பிள்ளை ஏதோ கேள்வி கேட்க்க அதற்கு பதில் தெரியாமல் அந்த பெண் நின்றுகொண்டிருந்தது, அப்பொழுது அந்த வீட்டில் உள்ள பையன் சொன்னான் பெரியக்காவிற்கு ஒன்றும் படிக்கத்தெரியாது மண்டு அக்கா என்று மாபிள்ளை இடம் சொல்ல, அதை கேட்ட அந்த மாப்பிளை ஆச்சிரியத்தோடு, உங்க அக்கா மக்கா!! என்று கேட்டு இருக்கிறார், உங்க அக்கா மக்கா என்றது மருவி ஒக்கமக்க என்று ஆகிவிட்டது..


அதுபோல் கொய்யால மற்றும் டகால்டி எப்படி வந்தது என்று பார்போம்,

கொய்யால

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள், அம்மாவுடைய அப்பாவை அய்யா என்றுதான் சொல்லுவார்கள். அப்படி ஒரு அய்யா இருந்தார், அவர் மிகவும் கண்டிப்பானவர், தன் பேர குழந்தைகளை தன் கட்டுபாட்டில் வளர்ப்பவர், அவருக்கு ஒரு பேரன் இருந்தான், அவன் எப்பொழுதும் மறைமுகமாக பீடி குடிப்பான், ஒரு நாள் அந்த பையனும், அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து வயல் வெளியில் பீடி குடித்துகொண்டிருந்தார்கள், அப்பொழுது அந்த கூட்டத்தில் ஒருவன் அவனை பயமுறுத்துவதற்காக, ஏலே உங்க அய்யா வர்ரார்லே, என்று அவனை பயமுறுத்தினான், அவன் பயந்துபோய் பார்த்தான், அதே போல் இரண்டு தடவை அவனை பயமுறுத்தினான், அதற்கு அவன் பயப்படவில்லை,அந்த வேளையில், அவனுடைய அய்யா பின்புறமாக வந்தார், அந்தநேரத்தில் அவனுடைய கூட்டாளி ஒருவன் அவனுடைய அய்யா வருவதை பார்த்தவுடனே, பதட்டத்தில் உங்க அய்யாலே என்பதற்கு பதிலாக கொய்யாலே என்று சொல்லிவிட்டு ஒட்டிவிட்டான், பின்பு அவன் மாட்டிகொண்டன், அவனை அவர் அய்யா கம்பை (கொம்பை) எடுத்து விளாசு, விளாசுனு, விளாசிவிட்டார், அன்று முதல் அவனை கொய்யாலே என்றால் பயபுடுவான். பயமுறுத்துவதற்காக சொன்ன வார்த்தை தான் கொய்யாலே, இப்பொழுது புரிந்துவிட்டதா உங்களுக்கு

டகால்டி

கோயமுத்தூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வெட்டி பயல் இருந்தான், அவன் எப்பொழுதும் டீ கடையில் உர்கார்ந்துகொண்டு, OC டீ குடிப்பதுதான் வேலை, ஊரில் நடக்கும் எல்லா செய்திகளையும், அவன் அந்த டீ கடையில் வந்து சொல்லுவான், அவனுக்கு டீ வாங்கி கொடுத்தால் போதும், உடனே அவன் ஊரில் நடக்கும் சில கதைகளை அவிழ்த்துவிடுவான், ஒருநாள் டீ கடைகாரர் கேட்டார், என்னடா நேத்து நம்ம ஊரிலே அடிபிடி சண்டையாமே, அது எதனால் வந்தது, சொல்டா என்றார், உடனே அவன் டகால்ன்னு ஒரு டீயை போட்டு குடு நான் சொல்றேன் என்றான், அந்த நாள் முதல் அவன் வந்தால் அவனை, டகால்ன்னு டீயை வாங்கி குடிக்கிற பார்டி வந்துவிட்டான், என்பார்கள், ஓசியில் டகால்ன்னு டீ வாங்கி குடிப்பதால் அதுமுதல் அவன் டகால்டீ பார்டி ஆகிவிட்டான்.

இப்படித்தான் இந்த உங்க அய்யாலே என்பது கொய்யாலே ஆனது, டகால்ன்னு டீ வாங்குவதாலே- டகால்டீ ஆகிவிட்டது, குண்டு அக்கா, மண்டு அக்கா, -குண்டக்க மண்டக்க ஆனது, உங்க அக்கா மக்கா என்பது ஒக்கமக்க ஆகிவிட்டது.

நன்றி நண்பர்களே உங்களுக்கு வேறு எதை பற்றியும் தெரியவேண்டும் என்றால் எனக்கு எழுதி அனுப்பவும், நான் கண்டுபிடித்து தருகிறேன், இப்பொழுது புரிகிறதா தமிழ் மொழியை பற்றி- தமிழ் எங்கள் உயிர்

அன்புடன்
ஜீவா

செவ்வாய், 10 மார்ச், 2009

ஹைக்கூ கவிதை

எல்லோரும் ஹைக்கூ கவிதை எழுதுகிறார்களே நாமும் எழுதி பார்போம் என்று முயன்றதன் விளைவுதான் இந்த ஹை கூ கவிதை தொகுப்பு, எப்படி எழுதவேண்டும் என்று கற்று கொடுத்தது நண்பர் திரு.தவநெறிசெல்வம் அவர்கள், உதாரணம் காட்டியவர் முருகவேல் அவர்கள். அதனால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூறி தொடங்குகிறேன்,

சும்மா இருப்பதைவிட பயனற்ற முயற்சியாவது செய்வது மேல்-லெனின்

வெட்டியவன் வரலாற்றை
வெட்டு பட்டவன் சொல்கிறான்
கல்வெட்டு

உடல் முழுவதும் பார்த்தான்
உயிர் நீங்களாக
கசாப்பு கடைக்காரன்

கைகள் பந்தியிலே
உடல் பந்தலிலே
வாழைமரம்

எல்லோருக்கும் ஊட்டிவிட்டு
தான் மட்டும் பட்டினியாய்
கை

கேவலமாக பார்க்கும் இவனை
காசு கொடுத்து வாங்குகிறார்கள்
தலைமுடி

அழும் இவனை கையில் எடுத்தால்
அழுகையை நிறுத்துவான்
Land phone

கிணற்று தவளை
பேசும் தவளை
நாக்கு

அசையும் இவனுக்கு
அசையாமல் வணக்கம்
தேசியக்கொடி

வெட்டியவனை
அழவைப்பான்
வெங்காயம்

ஒரு ஊமை
பாடம் சொல்லி தருகிறது
புத்தகம்

கருப்பு குடையில்
ஓட்டைகள்
நட்சத்திரம்

முழு நிலவுக்குள்
சிறு சூரியன்
குங்குமம்

தப்பு செய்தால்
அழித்திடுவான்
ரப்பர்

சூரியனை சுற்றாத கோள்
பேப்பரை சுற்றும் கோள்
எழுதுகோல்

சாலையில் உன்பேட்சை கேட்காதாவன்
எமன் பேச்சை கேட்பான்
வேகம்

மதிக்காவிட்டாலும்
வீட்டு வாசல்வரை வருவான்
காலனி

பஞ்சபாண்டவருக்கு மகுடம்
வளரும் கீரிடம்
நகம்

பேச, நடக்க தெரியாத உனக்கு
கைகட்டு, கால் கட்டு
பிணம்

உள்ளதை கொண்டுவரும் உனக்கு
கழுத்திலே சுருக்கு
வாலி

உன் உள்ளே என்னை காடும்
காதலி நீ
கண்ணாடி

தினம் உன்னை பார்த்தால்
வயது கூடுகிறது
நாள்காட்டி-Calendar

உதைத்து உள்ளே அனுப்பியவனுக்கு பரிசு
உதை வாங்கி உள்ளேபோனவன்
கால்பந்து

அடிவாங்கியவன் ஓடினால்
அடித்தவனும் ஓடுகிறான்,
கிரிக்கெட்

வேலி தாண்டி குதித்து
விளையாடும் பூசணிக்காய்
வாலிபால் (volleyball)

வண்ணபூக்களை வட்டமிடும்
வண்ண பூ
Butterfly

சத்தமில்லாத விமானம்
வானத்தில் வட்டமிட்டது
பருந்து

புதைகுழியில் மாட்டிக்கொண்டு
சிறகடிக்கும் கருவண்டு
கண்

உடையவனிடம் நடைபோட்டு
உலாவருபவர்கள்
கால்கள்

சொந்தவீட்டு சுவரில் மோதியதால்
தலையில் தீ
தீ குச்சி

உழைப்பவன் உடலில்
உற்பத்தியாகும் கடல்
வியர்வை

எல்லோருக்கும் வழிகாட்டிவிட்டு
நான் மட்டும் நடு வீதியில்
வழிகாட்டி(Signboard)

என்னிடம் கற்றுகொண்டவனுக்கு அயல் நாட்டில் வேலை,
எனக்கோ அலமாரி சிறை
புத்தகம்

அன்புடன்
ஜீவா

திங்கள், 2 மார்ச், 2009

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

நம்பிக்கைதான் கடலை கடப்பதற்கும், மலையை அளப்பதற்கும்
உதவியாக இருக்கிறது –காந்திஜி

குளிக்கரை சிவன் கோவில் மிகவும் கலைகட்டியிருந்தது, அன்று பிரதோஷம் என்பதால் மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் அலைமோதிகொண்டிரிந்தது, நானும் நண்பர்களுடன் அங்கு சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்திற்காக காத்து கொண்டிருந்தேன், அந்தே வேளையில் அர்ச்சகர் எல்லோரையும் விலகி நில்லுங்கள், விலகி நில்லுங்கள், வழிவிடுங்கள் என்று எல்லோரையும் விளக்கிகொண்டிருந்தார், அப்பொழுது நான் கண்ட காட்சி என்னை பிரமிக்க வைத்தது, நண்பன் குமாரை பார்த்து நான் சொன்னேன் அங்க பார்டா, அங்க பார்டா என்று, அதற்கு என் நண்பன் குமார் சொன்னான், என்னடா அங்க ஒண்ணுமே தெரியலே, மீண்டும் நான் அவனை அங்கே , நல்லா பாரு, நல்லா பாரு யார் நிற்கிறது தெரியுதா என்றேன், அதற்கு குமார் என்னை பார்த்து சொன்னான், ஜீவளுக்கு (எங்க ஊரில் என்னை சிவா அல்லது ஜீவல் என்றுதான் அழைப்பார்கள்) பைத்தியம் புடிச்சு போட்சுன்னு நினைக்கிறன், திருவிளையாடலில் வரும் சிவாஜி கணேசன் மாதிரி , நல்லாபாரு நல்லாபாரு என்று சொல்லுகிறான் என்றான். இதை கேட்டவுடன் அடுத்த நண்பன் குணா சொன்னான், குமாரு ஜீவலு சொல்வது சரிதான், நான் இதுவரை பார்க்காத காட்சிடா அது என் கண்ணுக்கு தெரிந்ததுவிட்டது ஆனால் உனக்கு தெரியவில்லையா? என்றான். இதை கேட்டவுடன் குமாருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. என்னடா ரெண்டுபேரும் சேர்ந்து என்னை பைத்தியமா ஆக்கிபுடலாம் என்று திட்டம் போட்டு வந்துருக்கிறீர்களா என்றான். மீண்டும் குமாரிடன் நான் சொன்னேன், கருப்பு தாவணிக்கும், ரோஸ் கலர் தாவணிக்கும் இடையில் யார் நிற்கிறது பார் என்றேன், குமார் பார்த்தவுடனே அந்த உருவம் மறைய தொடங்கியது. அந்த நேரத்தில் குமார், மெதுவாக போய் பார்த்தான், அங்கு போனே உடனே, கத்தினான், ஜீவலு வாடா நான் பிடித்துவிட்டேன், ஓடிவா ஓடிவா என்ற உடனே நானும் குணாவும் ஓடிபோய் மூன்றுபேரும் சேர்ந்து அந்த ஆளை பிடித்து கொண்டுவந்தோம்.

பிடித்து கொண்டுவந்த ஆளு வேறு யாரும் இல்லை , எங்கள் நண்பர் கூட்டத்தில் உள்ள ஒட்டகுடி வேலுபிள்ளை மகன் முருகன்தான் அது.

நண்பன் முருகனை பற்றி சொல்லவேண்டும் என்றால், அவர் உடற்பயிற்சி மன்னன், முற்றிலும் நாத்திகவாதி, கடவுளே இல்லை என்று சதா எங்களை பார்த்து சொல்லிகொண்டிருப்பவர், அவர் படிப்பகத்தில் எந்த நேரமும் புத்தகம் வாசிப்பவர்.

நாங்கள் கோவிலுக்கு போனால் எங்களை பார்த்து கேலி செய்பவர், கோவில் வாசலை அடியெடுத்து வைக்காதவர் , அப்படிபட்டவர், இன்று எப்படி கோவிலுக்கு வந்தார், அதுதான் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது,

எப்பொழுதும் கோவிலுக்கு வராத நீங்கள் எப்படி இன்று மட்டும் வந்தீர்கள் என்று நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் சொன்னார் , இந்த பூஜை முடியட்டும் நான் உங்களுக்கு விபரமாக சொல்கிறேன் என்றார்.அந்த நேரத்தல் கோவில் மணியும் அடித்தது, பூஜையும் நடந்தது, எல்லோரும் சிவனை தரிசித்தோம்.

பூஜை முடிந்து பிறகு நாங்கள் வெளியில் உள்ள இலுப்பை மரத்தடியில் அமர்ந்தோம், அப்பொழுது நாங்கள் முருகனை கேட்டோம், சொல்லுங்கள் முருகன் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? அவர் சொல்ல தொடங்கினார்.

நான் திருநெய்பேரில் உள்ள எங்கள் அண்ணன் வீற்றிக்கு போன வாரம் ஞாயிற்று கிழமை போயிருந்தேன், அந்த ஊரில்தான் என் அண்ணன் வாத்தியாராக வேலை செய்கிறார், அவரிடம் நான் கணக்கு பாடத்தில் உள்ள சந்தேசத்தை கேட்டேன்,அதற்கு அவர் சொன்னார், நீ மாங்குடி போய் சண்முகவடிவேல் வாத்தியாரிடம் கணக்கு கற்றுகொள், வாரத்தில் சனி ,ஞாயிறு இரண்டு நாள் மட்டும் படித்துவிட்டு வா , அவரிடம் இதை பற்றி பேசிவிட்டேன், அதனால் நீ உடனே போய் பாடத்தை இன்று முதல் தொடங்கு என்று சொல்லிவிட்டார்,
அதனால் நானும், அண்ணன் வீற்றிக்கு பக்கத்திலுள்ள மணியும் ஞாயிற்றுகிழமை மாலை நான்கு மணிக்கு சைக்கிளில் புறப்பட்டோம்,வரும் வழியில் நானும் அவனும் பேசிக்கொண்டே வந்தோம், அப்பொழுது அவன் சொன்னான், முருகா நாம டியூசன் முடிந்த உடனே திருவாரூர் போய் தைலைமை திரைஅரங்கில், ஒரு தாயின் சபதம் படம் பார்த்து விட்டு பிறகு வீட்டுக்கு போவோம் என்று சொன்னான்.

அதற்கு நான் சொன்னேன், இல்லடா மணி எங்க அண்ணன் இரவு 9:30 மணிக்குள் திரும்பி வந்திடனும், இல்லையென்றால் உதைப்பேன் என்று சொல்லிவிட்டார். அதனால் நீ மட்டும் போய்வாடா என்று சொன்னேன் அதற்கு அவன் சொன்னான் , முருகா நீ டிக்கெட்டுக்கு காசை பற்றி கவலைபாடாதே நான் எடுக்கிறேன், அது மட்டும் இல்லடா முருகா இந்த படம் இன்று கடைசி நாள் போனால் பார்க்கமுடியாது அதனால நாம டியூசன் முடிந்தவுடன் போறோம் என்றான்.
அதற்கு நான் சொன்னேன், இல்லடா மணி என் அண்ணனுக்கு படிப்புதான் முக்கியம், படம் பார்த்தால் என்னை அவர் அடிப்பார் என்றேன்.

உன் அண்ணனிடன் நான் பேசிக்கொள்கிறேன் என்று மணி சொன்னவுடன் நானும் ஒற்றுகொண்டேன்.

நாங்கள் இருவரும் டியூசன் மாங்குடியில் முடித்துவிட்டு, பிறகு சினிமாவிற்கு திருவாரூர் போய்விட்டோம், நான் படம் பார்க்கும் வேளையில், அண்ணனை நினைத்தது பார்த்தேன் வயிற்றில் புளிகரைத்தது மாதிரி இருந்தது.

படம் விட்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டோம், திருநெய்பேருக்கு போனால் அண்ணன் அடிப்பார், அதனால் நான் குளிக்கரை போய்விடலாம் என்று நினைத்தேன், அதனால் மணியிடம் சொன்னேன், மணி நீ மட்டும் ஊருக்கு போ நான் இப்படியே குளிக்கரை போய்விடுகிறேன் என்றேன், முருகா நான் இருக்கிறேன் நீ பயபடாம என்னோடு வா என்றான், அதனால் நானும் அவனுடன் மீண்டும் திருநெய்பேருக்கு போனேன்.

போகும் வழியில் எனுக்கு பயமாக இருந்தது, அதனால் அவனிடம் சொன்னேன், மணி எனக்கு பயமா இருக்கு, நீ மட்டும் போ, நான் இப்படியே புலிவலத்திலிருந்து குளிகரைக்கு போய்டறேன் என்றவுடன், அவனுக்கு கோபம் வந்து, சரிடா நீ போடா என்று சொல்லிவிட்டான்.

அவனை விட்டுவிட்டு நான் புலிவளத்திலிருந்து வெள்ளகுடி போகும் ரோட்டில் சைக்கிளை விட்டேன், பாதி தூரம் வந்தவுடன் இருட்டை கண்டவுடன் மீண்டும், பயந்துபோய் திரும்பி. மணியை பிடித்துவிடலாம் என்று நினைத்து, வேகமாக சைகிளை ஓட்டினேன், மாங்குடிவரையில் வந்து பார்த்தேன் மணியை காணவில்லை, என்னடா செய்றது வீடிற்கு போனால் அப்பா அடிப்பார், திருநெய்பேர் போனால் அண்ணன் அடிப்பார், இப்படி நினைத்து நினைத்து, பிறகு அண்ணன் வீடிற்கு போகலாம் என்று ஒருமுடிவுக்கு வந்து சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் வந்தவுடம் சைக்கிளில் காற்று இரங்கி விட்டது,

நான் ஒன்னும் செய்யமுடியாமல் அங்கு ஒரு மதகடியில் சைகிளை நிறுத்தி வைத்துவிட்டு, ரோட்டோரத்தில் இருக்கும் மதகடியில் நானும் படுத்து விட்டேன், கொஞ்ச நேரத்தில் நான் உறங்கிவிட்டேன், கனவில் யோரோ என்னை உதைப்பதுபோல் தெரிந்தது, விழித்துப்பார்த்தால் யாரும் இல்லை, நான் மதகு அடியில் இருந்து கீழே விழுந்து இருப்பதை அப்பொழுதான் பார்த்தேன்,மீண்டும் நான் மதகுமேல் படுத்தேன், மீண்டும் யோரோ உதைப்பது போல் உணர்ந்தேன், பார்த்தால் அதேபோல் நான் கீழே விழுந்து கிடந்தேன்.

இது அண்ணன் அடிப்பார் என்ற பயத்தினால் வந்த கனவு என்று நினைத்து மீண்டும் மதகில் தூங்கினால், மீண்டும் யோரோ உதைப்பதுபோல், அதேபோல் நான் கீழே கிடந்தேன் , பயந்து போய் நான், சைகிளை காற்று இல்லாமல் ஓட்டினேன், இரண்டரைமணிக்கு திருநெய்பேருக்கு அண்ணன் வீடிற்கு வந்தால், அண்ணன் தூங்காமல் வாசலில் உர்காந்திருந்தார், என்னை கண்டவுடன் , ஓடிவந்து எங்கடா போனே உன்னாலே எனக்கு தூக்கமே போச்சுடா என்று சொல்லி கன்னத்தில் இரண்டு அரை விட்டார்.

என்னை மன்னிச்சுடு அண்ணன், தெரியாம செய்துவிட்டேன் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்றவுடன், அந்த நேரத்தில் அண்ணி ஓடிவந்து தலைக்கு உயர்ந்த பிள்ளையை அடிக்காதிங்க என்றவுடன், அண்ணன் சமாதானம் ஆனார், பிறகு என் அண்ணி என்னை சாப்பிட சொல்லியது, சாப்பிடும் வரை அண்ணனும் தூங்காமல் விழித்துகொண்டிருந்தார், நான் சாப்பிட்டு முடித்தவுடன், பேனா நோட்டு எல்லாம் எங்கே என்று கேட்டார், அப்பொழுதான் எனக்கு ஞாபகம் வந்தது , மதகு கட்டையில் தூங்கும் பொழுது அங்கேயே விட்டுவந்தது.நோட்டை தலைக்கு வைத்து தூங்கியதால், வரும்பொழுது அங்கேயே விட்டு வந்து விட்டேன். பரவாயில்லை நாளைக்கு போய் எடுத்துகொள்வோம், நீ படுத்து தூங்கு என்றவுடன் நான் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில் நான் எழுந்தவுடன் அண்ணன் சொன்னார் , முருகா உடனே கிளம்பு , சைக்கில் பஞ்சர் ஆகிவிட்டது , அதனால நீ என்னோடு ஸ்கூட்டரில் வா உன்னை திருவாரூரில் விட்டுட்டு நான் பிறகு பள்ளிக்கூடம் போறேன் என்றவுடன், பிறகு நானும் அவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டோம், வரும் வழியில் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம், அப்பொழுது அண்ணன் சொன்னார், மணி ராத்திரி வந்து சொன்னான், சினிமாவுக்கு போன விஷயத்தை

தம்பி நீ சினிமாவிற்கு போகவேண்டாம் என்று நான் சொல்லல, நைட் சோ போகாதே , இன்னும் ஒரு மாசத்துலே பொது தேர்வு வருகிறது, அதனால நீ நல்லா படிக்கணும், நம்ம குடும்பத்தில் யாரும் கஷ்டப்படக்கூடாது, அதுதான் என் எண்ணம், புரிஞ்சுதா, ராதிரிவேற உன்னை நான் அடிச்சுபுட்டேன், அத நீ மனசுல வசிக்காத, படிப்புல கவனமாக இருக்கணும் என்றார்சரி அண்ணே என்றேன்,
நாங்கள் பேசிக்கொண்டே வந்தபொழுது என்னை அண்ணன் கேட்டார், ராத்திரி எங்க படுத்துயிருந்த அந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா, என்று கேட்டவுடன்
நான் சொன்னேன், மாங்குடியில ஒரு இரட்டை பனைமரம் பேருந்து நிறுத்தத்திற்கு பக்கத்தில் உள்ள மதுகடியில் என்று சொன்னவுடன், அவர்சொன்னார், தெரியும், தெரியும், புரிஞ்சுகிட்டேன் என்றார்,

ஸ்கூட்டர் சொஞ்ச தூரம் வந்தவுடன், அண்ணன் சொன்னார், என்னடா முருகா, அங்க பார்த்தியா நீ படுத்திருந்த இடத்தில மக்கள் கூட்டம் அதிகமா நிற்கிறது என்றார் நானும், ஆமாம் அண்ணே அங்கதான் நான் படுத்து இருந்தேன், வாடா போய்ப்பார்ப்போம் என்றவுடன் நானும், அண்ணனும் ஸ்கூட்டரில் இருந்து இறங்கி அந்த கூட்டத்தை விளக்கி பார்த்தால் , நான் படுத்திருந்த மதில் கட்டையில் ஒரு லாரி மோதி, மதில் கட்டை உடைந்து, லாரி தலைகீழாக வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்தது, அதை பார்த்தவுடன் எனக்கு மனசு படபடன்னு அடித்துகொண்டது, அந்த நேரத்தில் என் அண்ணன் என்னை கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார் நானும் அழுதுவிட்டேன், நான் அன்று அங்கே தூங்கி இருந்தால், நான் இன்று உங்களோடு பேசிகொண்டிரிக்க மாட்டேன் என்றவுடன் நாங்களும் , முருகனை கட்டி பிடித்துகொண்டோம்.

இது நடந்த கதை என் மனதை மிகவும் பாதித்தகதை. இதில் கொஞ்சம் நான் இட்டு கட்டி எழுதியிருக்கிறேன், அதாவது மனதில் இட்டு , கட்டி வைத்திருந்ததை, அவிழ்த்து விட்டிருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு மன மாற்றம் வரும் அது ஏதோ ஒரு சம்பவத்தில் வரலாம், இதுபோல் உங்கள் மனதை பாதித்த சம்பவம் இருந்தால் எனக்கு எழுதி அனுப்பவும்.
அன்புடன்
ஜீவா

சனி, 28 பிப்ரவரி, 2009

கடவுளும், நானும்

உங்கள் அன்புடன் இந்த வலைப்பதிவில் முகம்பதிக்கிறேன் இந்த அன்புடன் ஜீவா. நாம் எல்லோரும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை எல்லாம் அவன் செயல் என்று அதனால் அவனையும் வணங்கி, உங்களுக்குள் அவன் இருப்பதால் உங்களையும் வணங்கி இன்று முதல் எழுத ,தொடங்குகிறேன் அவன் இன்றி நான் இல்லை, உங்களுக்குள் அவன் இல்லாமலும் இல்லை. அதனால் கடவுளும், நானும் என்ற தலைப்பில் முதலில் தொடங்கும் இந்த உரையாடலை படித்து பாருங்கள்.

கேள்வி படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்,
அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்- மகரிசி

கடவுள் : குழந்தாய் ஏன் என்னை அழைத்தாய்?

நான் : உன்னிடம் நான் சில கேள்விகளை கேட்க்கவேண்டும்?

கடவுள் : எதை கேட்பதாக இருந்தாலும் 27 நிமிடத்தில் கேள்.

நான் : அது என்ன 27 நிமிடம்?

கடவுள் : மிகவிரைவில் அதை நீ புரிந்துகொள்வாய்1

நான் : இந்த பிரபஞ்சமும் , உயிரும் எப்படி தோன்றின?

கடவுள் : கருமை படலத்தில் (இருட்டு பகுதியில்) பல ஆயிரும் கோடி வருடங்களுக்கு முன்பு மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதி-(Big Bank) வெடித்து சிதறி இந்த பிரபஞ்சமும், உயிரும் தோன்றின, இதை நான் முழுமையாக விளக்க வேண்டும் என்றால் இந்த 27 நிமிடம் போதாது, உனது ஆயுள் முழுவதும் இதை விளக்க வேண்டிவரும், இது ஒரு சின்ன விஷயம் இல்லை, இது மிகபெரிய உருமாற்ற தொடர்கதை. இதையெல்லாம் செய்தது நான் என்று சொன்னால், ஒன்றோடு ஓன்று மோத விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் உன் வேலையா என்று என்னை கேட்பாய். அப்படி நான் செய்யவில்லை என்றால் நீ இப்பொழுது கேள்வி கேட்க முடியாது தெரியுமா.?அதனால் உனக்கு முக்கியமான, பயனுள்ள சில கேள்விகளை மட்டும் கேள்.

நான் : ஆத்மா, மறுபிறவி உண்டா தெளிவாக விளக்கவும்?

கடவுள் : குழந்தாய்! தெளிவாக விளக்கவேண்டுமா, இதை நன்றாக கேட்டு புரிந்துகொள், “இல்லாமல் இருந்துகொண்டிருந்தது , இல்லாதது இருந்துகொண்டிருப்பது, இருந்தது இல்லாமல் இருந்துகொண்டிருப்பது.”

நான் : இறைவா! எனக்கு தலை சுற்றுகிறது ஒன்றும் புரியவில்லை, பாட்டாக சொல்லாமல் உரைநடையாக சொல்.

கடவுள் : குழந்தாய்- திருவள்ளுவரும் , சில சித்தர்களும், பாட்டாக பாடினால் மட்டும் புரியும் ஆனால் நான் மட்டும் உரை நடையாக சொல்லவேண்டுமா, நான் சொன்னதை எழுதிவைத்து ஒன்றுக்கு நாலு தடவை படித்துபார்த்து புரிந்துகொள்., நேரம் போகிறது (27 நிமிடம்) அடுத்த கேள்விக்கு வா.

நான் : ஏன் இந்த பூமியில் சில மத, சாதி சண்டைகள், பூகம்பம், சுனாமி வருகிறது, அதை எல்லாம் நீ மேல இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய் ,இங்கு நடப்பதை எதுவுமே நீ ஏன் கண்டுகொள்வதில்லை?

கடவுள் : என்ன! நீ சொல்வது எல்லாம் உண்மையா? நான் மேலே இருந்து பார்த்து கொண்டிருக்கிறேனா? இது ஒன்றுமே எனக்கு தெரியாதே.

நான் : இறைவா! என்ன சொல்கிறாய்? அப்ப நீ எங்கு தான் இருகிறாய் சொல்? நீ தூணிலும் , துரும்பிலும் இருப்பதாக சொன்னார்களே!

கடவுள் : குழந்தாய், நான் தூணிலும் , துரும்பிலும் இருப்பதாக சொன்னால், நீ உன்னை மறந்து விட்டு, அங்கே போய் தேடுவாய், அந்த நேரத்தில் உன்னிடம் உள்ள உடைமைகளை சில பேர் எடுத்துகொண்டு போய்விடுவார்கள், அதுபோல் வேறு மனிதர் வந்து உன்னிலும்,என்னிலும் இருப்பதாக சொன்னால்,அப்பவும் உன்னை மறந்துவிட்டு மற்றவரிடம் நான் இருக்கிறேனா என்று தேட போவாய், அப்படி தேட போனால் அங்கு என்னை மட்டும் அல்ல, உன் உடைமைகளையும் நீ தேடி கொண்டுதான் இருப்பாய்.

நான் : கடவுளே! எங்குதான் இருக்கிறாய்?

கடவுள் : நான் மேலே தான் இருக்கிறேன், ஆனால் நான் மேலே போனதற்கு காரணம் நீங்கள் தான்?

நான் : என்ன சொல்கிறாய் நீ மேலே போனதற்கு நாங்கள் காரணமா?

கடவுள்: ஆமாம், நீங்கள் எப்ப பார்த்தாலும் , மேலே உள்ளவன் பார்த்துக்குவான், மேலே உள்ளவன் பார்த்துக்குவான் என்று நீங்கள் சொல்ல அதை கேட்டு கேட்டு எனக்கு புளித்துபோய், வெறுத்து போய் , உங்களோடு இருந்த நான் மேலே வந்துவிட்டேன்.

வேறு ஒரு காரணமும் இருக்கு குழந்தாய், நீண்ட காலமாக உங்களையும், பிரபஞ்சத்தையும் படைத்த எனக்கு ஓய்வு வேண்டாமா? நீங்கள் எட்டு அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை செய்துவிட்டு வந்து நன்றாக ஓய்வு எடுக்கிறீர்கள் நான் மட்டும் ஓய்வு எடுக்க கூடாதா?

நான் : கடவுளே என்னை மன்னித்துவிடு உன்னை தொந்தரவு செய்துவிட்டேன்.
கடவுள் : நீ என் குழைந்தை, நீ என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லவேண்டியது என் கடமை அதனால் பயப்படாதே குழந்தாய்.

நான் : அப்ப உனக்கு இங்கு பூமியில் நடப்பது ஒன்றும் தெரியாதா, நீ மேலே இருந்து பார்க்க முடியாதா?

கடவுள் : இத்தனை கேள்விகளையும் கேட்கிறாயே நீ எங்கிருந்து கேட்கிறாய்?

நான் : அபுதாபியில் இருந்துதான்?

கடவுள் : அது தான் நீ பிறந்த ஊரா?

நான் : இல்லை, நான் பிறந்த ஊர் புலியூர் இந்தியா.

கடவுள் : புலியுருக்கும் அபுதாபிக்கும் எத்தனை தூரம், பக்கமா?

நான் : இல்லை மூன்று ஆயிரம் கிலோமீட்டர், மிகவும் தூரம், கால்நடையாக வரமுடியாது அதனால், நான் விமானம் என்னும் பறக்கும் ஒரு சாதனம் உள்ளது அதன்மேல் ஏறி பறந்துவந்தேன், அது பெட்ரோல் என்னும் திரவத்தால் பறக்க கூடியது, அந்த பெட்ரோலை நாங்கள் பூமியில் துளையிட்டு (Drill Machine ) கண்டு பிடித்தோம், உனக்கு விமானத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்பதற்காக சொன்னேன், அது பறந்தால் மிக உயரத்தில் பறக்கும், மேலே வந்து விட்டால் கீழே நடப்பது ஒன்றும் தெரியாது.


கடவுள் : விமானத்தில் வரும்பொழுது,மேலே இருந்து பார்த்தால் கீழே நடக்கும் நிகழ்வுகளையும் ,சண்டைகளையும் உன்னால் பார்க்க முடியாது என்று சொல்கிறாய் அப்படிதானே?

நான் : அப்படித்தான் பார்க்கமுடியாது?

கடவுள் : அதே போலதான் மேலே இருக்கும் என்னாலும் பூமியில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கமுடியாது.

நான் : இறைவா! என்ன சொல்கிறாய், அப்படியென்றால் பூமியில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் யாருடைய கட்டுப்பாட்டில் நடக்கிறது?

கடவுள் : நீங்கள் ஒன்று சொல்வீர்களே, Man Based , System Based அதுபோல் இது Nature based முற்றிலும் இயற்கையின் கட்டுப்பாடில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன், அதனால், நீங்கள் என் படைப்பாகிய இயற்கையை தூண்டினால் அது உங்களை தண்டிக்கும், அதனால் நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளவும்.

நான் : இப்பொழுது மனித குலத்திக்கு புதிய புதிய நோய் வருகிறது, எயிட்ஸ் போன்ற நோய்கள் அது எப்படி வந்தது அதை போக்க வழியில்லையா? தெளிவாக சொல்லவும், தெளிவாக என்றால், முன்பு சொன்னதுபோல், இருந்தது போனது என்று கவிதைநடை வேண்டாம்,
கடவுள் : நீங்கள் பெட்ரோல் எப்படி கண்டு பிடித்தீர்கள், துளைபானை வைத்து பூமியில் என்ன இருக்கும் , என்ன இருக்கும் என்று துளையிட்டு தேடியதால் பெட்ரோல் கிடைத்தது, அது போலதான் நீங்கள் கண்டு பிடித்த எயிட்ஸ் நோயும்.

நான் : பெட்ரோலை பற்றி எப்படி உனக்கு தெரியும்?

கடவுள் : நீதான் அபுதாபி எப்படி வந்தாய் என்று விளக்கியது, அப்பொழுது சொன்னதுதான் இந்த பெட்ரோல் கதை புரியுதா?

நான் : அட கடவுளே!

கடவுள் : நான் தான் இருக்கிறேனே ஏன் அழைகிறாய்?

நான் : இல்லை நேரம் முடிய இன்னும் 5 நிமிடம் தான் இருக்கிறது அதான்.

கடவுள் : அதனால் உடனே கேள்வியை கேள்?

நான் : இந்த பூமி இன்னும் 35 வருடத்தில் சூடேறி அழிய போகுதாமே? அதற்கு எதாவது மாற்று வழி உண்டா? அதுபோல் பூமி சுடேருவதை தடுக்க வழி சொல்லவும்? உன்னை நான் அடைய என்ன வழி?

கடவுள் : நேரம் கொஞ்சமாக இருக்கிறதால ஒரு கேள்விக்குள் மூன்று கேள்விகளை கேட்டுவிட்டாய் பலே கில்லாடி குழந்தாய் நீ.

பூமி சுடேருவதை தடுக்க, நீங்கள் கண்டுபிடித்த விமானத்தை வைத்து எல்லா இடத்திலும் மாட்டு சாணத்தை குண்டு போடுவதுபோல் போட்டு , மண் தன்மையை மாற்றி , மரங்கள் பயிரிட்டு , காட்டை வளர்க்கவும், பிறகு பச்சையாக காய்கறிகளையும், பழங்களையும் , உணவாக சாப்பிடவும், உங்கள் ஆறாவது அறிவை கொண்டு , சமைக்காமல் சாப்பிட வழியை கண்டு பிடிக்கவும். ஒரே வழி மீண்டும் நீங்கள் ஆதிவாசி ஆகிவிடுங்கள். நடக்காத காரியம் என்று தெரிந்து தான் உங்களுக்காகவே அடுத்த பூமியாக்க நிலவை கொடுத்து உள்ளேன். பூமி பழுதடைந்து போனால் அடுத்த பூமி நிலவுதான் ,அதையும் நாசம் செய்தது விடாதிர்கள் (Moon is Stepni of Earth )

என்னை அடைய வழி, உழைப்பு என்னும் வண்டியில், அன்பு என்னும் மாட்டை பூட்டி, சத்தியம் என்னும் பாதையில், வாழ்க்கை என்னும் பயணத்தை தொடர்ந்து வா , வழியில் தர்ம சத்திரத்தில் இறங்கி, புண்ணிய நீர் குடித்து வந்தால், நீ என்னை பார்க்க முடியும்

நான் : இத்தனை கேள்விகளுக்கும் அழகாக பதில் சொன்னியே உனக்கு தமிழ் இங்கலிஷ் தெரியுமா?

கடவுள் : நீ எந்த பாசையில் கேள்வி கேட்டாய்?

நான் : தமிழ் பாசையில்தான்?

கடவுள் : குழந்தாய் நீ எந்த பாசையிலும் கேட்க்கவில்லை நீ கனவு கண்டுகொண்டிருக்கிறாய். உடனே எழு இப்பொழுது அலாரம் அடிக்க போகிறது என்று கடவுள் சொன்னவுடனே என் கடிகாரத்தில் அலாரம் அடித்தது.

அலாரம் அடித்து விழித்து கொண்டது நான், நீங்கள்?


உங்கள் நல் ஆதரவோடு உங்களில் நான்
அன்புடன்
ஜீவா

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஜீவாவின் சுற்றுலா

நாள் - திங்கள் கிழமை- 07/12/08
இடம் -அபுதாபி -அமீரகத்தின் -அலைன்-( Al Ain ) ஜபல் அல் ஹபிட் –( Jabal Al Hafeet ) மற்றும் துபாய் - ஜுமைரா கடற்கரை.
பங்கேற்பாளர்கள்
சரவணன் - சிற்றுலா தலைவர்
குமார், ஜீவா, மகாலிங்கம்,முனுசாமி, ஷண்முகம், ரமேஷ், ராஜாங்கம், சின்ன சரவணன், சுரேஷ், ரூபன், ஜெயகுமார், மற்றும் கண்ணன் நாங்கள் மொத்தம் பதிமூன்று பேர்கள்.

திங்கள் கிழமை காலை சரியாக எட்டு மணிக்கு வண்டி புறப்பட்டது, அந்த நேரத்தில் குமாரையும் , மற்றும் சில நண்பர்களை காணவில்லை, குமார் எங்கே என்று கேட்டபொழுது, கை நிறைய கூடை கேக், இனிப்பு கேக், மற்றும் பழச்சாறு குப்பி வாங்கிகொண்டு மாடர்ன் பேகரியில் இருந்து மிகவேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறினார்கள். வண்டி புறப்பட்டது , மெதுவாக நகர்ந்தது, வண்டியின் ஓட்டுனர் மிகவும் குள்ளமானவர், அவரின் குரல் மிகவும் கீச்சி, கீச்சி என்று இருக்கும் , அவர்தான் எங்கள் மகிழ்ச்சிக்கு காரணமானவர். அவர்மட்டும் இல்லை என்றால் சிரிப்புக்கு வழி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது வண்டி எலக்ட்ரா ரோட்டை வந்து அடைந்தது, அங்கே ராஜாங்கம் என்னும் நண்பருக்காக வண்டி காத்துகொண்டிருந்தது. காத்து கொண்டிருந்த எலக்ட்ரா சாலையில் பிலிப்பைன் நாட்டு பெண்ணும், ஒரு தமிழ் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள், அதை சுரேஷ் என்பவர் வண்டியில் இருந்தபடி மிகவும் ரசித்துகொண்டிருந்தார், (சுரேஷ் மட்டும் அல்ல எல்லோரும்தான்) ராஜாங்கத்திற்காக காத்து இருந்த நேரத்தில், பூத்து இருந்த நடமாடும் பூவை பார்த்து நேரம் போனது.
ராஜாங்கம் ருவைஸ் எனும் ஊரிலிருந்து வந்துகொண்டிருந்ததாக சொன்னார்கள். இதில் பெரிய கூத்து என்னவென்றல் ராஜாங்கத்திற்கு, எலக்ட்ரா ரோட்டில் உள்ள எலக்ட்ரா சினிமா மட்டும்தான் தெரியுமாம். அவருக்கு அபுதாபியில் வேறு எந்த இடமும் தெரியாது என்று நினைக்கிறேன் அதனால் மிகவும் தாமதமானது.. சற்று நேரத்தில் அவரும் வந்து சேர்ந்தார். வண்டி எலக்ட்ரா சாலையை விட்டு புறப்பட்டது. அங்கிருந்து வண்டி கார்னிச் சாலை வழியாக அலைன் நோக்கி போய்க்கொண்டிருந்தது,
வண்டி போய்க்கொண்டிருந்த சமயத்தில், எல்லோருக்கும் தமிழ் பாட்டு கேட்கவேண்டும் என்ற ஆவல். அதனால் குமார் கைபேசியில் உள்ள ஞாபக அட்டையை எடுத்து ஓட்டுனரிடம் கொடுத்தோம். அவர் அதை வாங்கி யு எஸ் பி ரீடரில் இட்டு பாட்டை பாட செய்தார். முதல் பாட்டு தலைவர் பாட்டு, பல்லே லக்கா பாட்டு, அதை கேட்டபடி வண்டி சென்றுகொண்டிருந்தது . ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுற்றுலா தலைவர் சரவணன் பாட்டை கேட்டபடி, தலை அசத்து ஆட்டம் போட்டார். நானும் ஆட்டம் போட்டேன். வண்டி உம் அல் நாரை கடந்து சென்றவுடன். சில நண்பர்களுக்கு உறக்கம் வர தொடங்கிவிட்டது. பிறகு பநியாசை வண்டி நெருங்கியவுடன் எல்லோரும் உறங்கிவிட்டார்கள்.
வண்டி போய்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்த்த போது சாலையின் இருபுறமும் மணல் குவியல்கள், மண் குவியலின் மேல் காற்றின் கைவண்ண ஓவியம். அவற்றில் ஓன்று பெண்கள் அணியும் நெளி வளையல்கள் போன்ற ஓவியம். அள்ளி உண்ண முடியாத கோதுமை குவியல் இன்னும் எத்தனை அழகு வர்ணிக்க நேரம் போதவில்லை. இப்பொழுது வண்டி அலைன் வந்து சேர்த்துவிட்டது, ஆனால் மலைமேல் போக வழி தெரியவில்லை, அந்த இடத்தின் பெயருன் ஓட்டுனருக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் ஓட்டுனர் ஒரு பாகிஸ்தான் வழி போக்கனிடம் ஜபல் அல் பாயிதா கிதரே.? என்று கேட்டார், ஆனால் அவனுக்கு வழி தெரியவில்லை. மாலும் நஹி என்று சொல்லிவிட்டான். அடுத்து ஒரு அரபி பையனிடம் ஜபல் அல் பாயிதா ஒயின்? , என்று கேட்டார், அதற்கு அவன் சூ பி பாயிதா ? மாபி மாலும் என்று சொல்லிவிட்டான். பிறகு ஒரு வழியாக மலை பக்கத்தில் வண்டியை நிறுத்தி எல்லோரும் சிறுநீர் கழிக்க சென்றுவிடோம், அந்த நேரத்தில் ஓட்டுனர் , ஒரு மலையாள ஆளிடம் மலைக்கு மோல எங்கனே போவனும்.? என்று கேட்டு, வழி தெரிந்து கொண்டார். சிறுநீர் கழித்து விட்டு எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். வண்டி புறப்பட்டு சென்று மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அருகில் நின்றது. எல்லோரும் ஏரியின் அழகை ரசித்தோம், இந்த ஏரியின் நடுவில் ஒரு நீரை பாய்ச்சு அடிக்கும் ஊற்று உள்ளது. அதைவிட ஏரியின் உள்ளே, எத்தனை மீன்கள், அவை நாம் கொடுக்கும் உணவை உண்டு வாழ்கிறது. நாம் உணவை நீரில் போடும் போழ்து அதை மீன் லாவி பிடிக்கும் அழகே அழகு. மீன்கள் ஒன்றோடு ஓன்று போட்டி போட்டுகொண்டு நாம் போடும் உணவு பண்டங்களை மேலே தாவி பிடிக்கும் அழகே தனித்தன்மை வாய்ந்தது. அங்கே எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுக்கும் சமயத்தில் ஸ்பீடு சண்முகம் வெகு தூரம் நடந்து சென்றுவிட்டார். அவர் எப்பொழுதும் வேகம்தான், . முனுசாமி என்னிடம் சொன்னார், சண்முகம் பைத்தியம் மாதிரி எங்க போறான்? கூப்பிடுங்கள் அவனை.என்றார் பிறகு நாங்கள் சண்முகத்தை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டோம்.
பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒன்றாக சேர்ந்து நின்று ஏரிக்கு அருகில் புகைப்படம் எடுத்துகொண்டோம், அதன் பிறகு நாங்கள் மலை மேல போக தயாரானோம், அப்பொழுது ஓட்டுனர் சொன்னார் மலை மேல போனால் நான் வேறு எங்கும் வரமாட்டேன் என்று தர்க்கம் செய்தார், அவரை நாங்கள் தாஜா செய்து பிறகு ஒற்றுகொண்டர், ( சந்தோசத்தை மட்டும் இலக்காகக்கொண்டு சிற்றுலா போன நாங்கள், ஓட்டுனரிடம் ஏற்ப்பட்ட சில வழுக்குகளை நான் சொல்ல விருப்பவில்லை) , வண்டி புறப்பட தயார் ஆனது, எல்லோரும் ஏறியாச்சா என்று ஒருமுறை சரி பார்த்துவிட்டு, வண்டி புறப்பட்டு மலையின் அடிவாரத்தில் ஒருவட்டம் அடித்தது, அப்பொழுது அங்கே தற்காலியமாக அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்களில் அரபி நாட்டவர்களும் , மற்றும் பிலிப்பைன் நாட்டு மக்களும். தங்கி தங்களின் சந்தோஷத்தில் பாடிக்கொண்டும்,ஆடிகொன்டும் இருந்தார்கள், அப்பொழுது அங்குஉள்ள ஒரு கூடாரம் காற்றில் ஆடிகொண்டிருந்தது, அதை பார்த்து விட்டு ஒரு நண்பர் சொன்னார், அங்கே பாருங்கள் கூடாரத்தின் உள்ள கூதுகலம் நடக்கிறது என்றார் அதற்க்கு வேறு ஒருவர் சொன்னார், நீ வேறப்பா அது காற்றில் ஆடுகிறது என்றார் அதை கேட்ட நாங்கள் எல்லோரும் சிரித்துவிடோம், பிறகு அங்கிருந்து வண்டி மலை மேல ஏற தொடங்கியது. கைத்தொலைபேசி ஒலித்தது, கைதொலைபேசியை எடுத்த உடனே சொன்னார், என்னும் கொஞ்சநேரத்தில் நாங்கள மேலே போய்விடுவோம் என்றார், அதற்க்கு நான் சொன்னேன் யோ என்னையா சொல்றே.? பயமுருத்தாதையா பயமாஇருக்கு, மலை மேலபோய்விடுவோம் என்று சொல்லு என்றவுடனே எல்லோரும் சிரித்துவிட்டோம். (நீங்கேள சொல்லுங்கள் இன்னும் சொஞ்சநேரத்தில் மேலே போய்விடுவோம் என்றால் யாருக்குத்தான் பயம் வராது.) அந்த சிரிப்பு ஒலி முடிந்தவுடேனே, நாங்கள் பார்த்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது அது வேறு வொன்றும் இல்லை. அந்த மலை மேல கட்டப்பட்டு இருந்த ஒரு கட்டிடம் மிகவும் அருமையாக இருந்தது, மலையின் விளிம்பில் கட்டப்பட்டு இருந்தது அது பயணிகள் தங்கும் வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம். கட்டிடம் மட்டும் அல்ல, மலைபுரத்தின் இருபுறமும் கிழே நோக்கினால் அருமையா காட்சிகளை நாம் காணமுடியும். வண்டி மலை உட்சியை வந்து அடைந்துவிட்டது. எலோரும் இறங்கினோம், இறங்கியவுடேனே நாங்கள் பார்த்த முதல் காட்சி பாட்டும்,ஆட்டமும்தான், ஸ்ரீலங்கா நாட்டு பெண்ணுடன் பாகிஸ்தானி பட்டான் சேர்ந்து ஆடிய ஆடம் மிகவும் அருமை, அங்கே வந்து இருந்தவர்களின் கூட்டம் அவர்களைத்தான் பார்த்து கொண்டிருந்தது. மலைமேல மிகவும் குளிராக இருந்தது. எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம்., அங்கே பாதுகாப்பு தடுப்பு வேலியை தாண்டி சென்று எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் மிகவும் பயங்கரமான பள்ளத்தாக்கு. அது மிகவும் ஆபத்தானது. அந்த மலையை பற்றி சொல்லவேண்டும் என்றால் அங்கே ஒன்றும் இல்லை ஒரே ஒரு ஓட்டல் மட்டும்தான் இருக்கிறது. வேறு வொன்றும் இல்லை. அதுவும் மிகவும் சிறிய ஓட்டல். அங்கே காலை பனிமூட்டம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் மிதமாக இருந்தது. எல்லோரும் அங்கு சுற்றி பார்த்தவுடன், பிறகு புறப்பட்டு கீழே இறங்கிவந்துவிட்டோம். எங்களின் அடுத்த சுற்றுலா தளம் துபாய் ஜுமைரா கடற்கரை, வண்டி பறந்து சென்றது துபாயை நோக்கி, வண்டி போகும் நேரத்தில் எல்லோரும் தூங்கிவிடோம், இடையில் ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்க எல்லோரும் இறங்கினோம். அது ஒரு பெட்ரோல் வழங்கும் இடம், அதில் உள்ள கழிபிடத்தில் , எல்லோரும் சிறுநீர் கழத்து விட்டு, ஒரு பத்து நிமிடம் ஓய்வு எடுத்துகொண்டோம். பிறகு எல்லோரும் வண்டியில் அமர்ந்துகொண்டோம். வண்டி மிகவும் வேகமாக துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த. மீண்டும் எல்லோருக்கும் பசி மயக்க உறக்கம் வந்துவிட்டது. எல்லோரும் விழித்து பார்த்தால் மணி மூன்று ஆகிவிட்டது , உண்ண உணவகம் , தேடி தேடி , மணி மூனரை ஆகிவிடாது, இறுதியில் துபாய் ஜுமைரா கடற்கரை பக்கத்தில் உள்ள ஒரு கே பி சி உணவகத்தில், என்னை தவிர எல்லோறோம் சிக்கன் சாப்பிட்டார்கள். பிறகு நாங்கள் கடற்கரை சென்றோம், அங்கே உள்ளாடைகளோடு அலையும் உலக அழகிகளை கண்டோம். நான் அந்த நேரத்தில் முனுசாமியை அழைத்துக்கொண்டுபோய் ஒரு ஆப்பிள் ஒரு பழச்சாறு குப்பி வாங்கி என் பசியை ஆற்றிகொண்டேன். பிறகு அங்கிருந்து ஜுமைரா கடற்கரை ஓட்டலுக்கு வந்தோம், அங்கு வந்தால், மேலை நாட்டு மெழுகு சிலைகள் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன, அந்த மெழுகு சிலையை பார்த்து சில பேர் உருகிவிட்டார்கள். சிலபேருக்கு ஓழிகியும் விட்டது, வேறு ஒன்றும் இல்லை எச்சில்தான் .( தவறாக நினைக்கவேண்டாம்) மெழுகு சிலைகள் குளிர்ந்த நேரம் என்பதால் உருகவில்லை. அயல் நாட்டு அழகிகளும் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன. ஒயில்டு-(Wild Wadi) வாடி எங்களை வாடி வாடி என்று அழைத்தாலும் நாங்கள் போடி போடி சொலிவிட்டு வந்து விட்டோம். அங்கும் புகைபடம் எடுத்துகொண்டோம்.

எல்லோரும் பிறகு வண்டியில் ஏறும் முன்பு , குமாரும் , சண்முகமும் துபையில் குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறையில் இருந்துகொண்டு சொல்லியிருக்கிறார்கள், நாம் இங்கு வந்தால் அவர்களும் வருவார்கள் பார் என்று அவர்கள் இருவரும் சொன்னதுபோல் , நாங்களும் வாங்க நாமும் அங்கு சென்று, உள்ளே பார்த்து வருவோம் என்றும் உள்ளே எல்லோரும் நுழைந்ததும், அப்பொழுது குமார் சொல்லி சிரித்தார், நாம வந்தா அவர்களும் வருவார்கள் பார் சொன்னது சரியாகதான் ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தார்கள், அங்கிருந்து எமிரட்ஸ் மாளிகை சென்று பார்க்கவேண்டும் , என்று சொன்ன உடனேயே ஓட்டுனருக்கு கோபம் வந்துவிட்டது, பிறகு ஒருவழியாக அவரிடம் Nokia கைத்தொலைபேசி வாங்கவேண்டும் என்று பொய்சொல்லிவிட்டு அவரை நிற்பந்தபடுத்தி அழைத்து சென்றோம். பிறகு எல்லோரும் எமிரட்ஸ் மாளிகை வந்து அடைந்தோம். அங்கு சுற்றி பார்த்துவிட்டு , மீண்டும் வண்டிக்கு வரும் பொழுது ஓட்டுனர் கேட்டார் எங்கே மொபைல் என்று எல்லோர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு எட்டரை மணிக்கு அபுதாபிக்கு வந்து அடைந்தோம் , சங்கீதாவில் மினி தாலி சாபிட்டோம், அத்துடன் எங்களது சிற்றுலா , துடங்கிய இடத்திலே நிறைவு பெற்றது.

இந்த சுற்றுலா மூலம் தங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த சுற்றுலா நம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவங்கள், அந்த அனுபவத்தை நினைவு படுத்துவது நான் எடுத்து கொண்ட புகைப்படம், தயவு செய்து புகைபடத்தை தொலைதுவிடாதிர்கள், தங்களுக்கு அறுபது வயது ஆகும் பொழுது இந்த புகைபடத்தை எடுத்து பாருங்கள். அந்த புகைப்படம் கதை சொல்லும், அந்த நிமிடம் நம் மனதை மகிழுட்டும். நன்றி நண்பர்களே, எல்லோரும் இன்பமுடன் இருக்க ,எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
ச.ஜீவா.

அன்புடன் ஜீவா.

இந்த வலைப்பூவில் எனது கவிதைகளும், எண்ணங்களும் இன்னும் நிறைய எழுத இருக்கிறேன், உங்களின் நல்லாதரவோடு.

அன்புடன்

ஜீவா