திங்கள், 2 மார்ச், 2009

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

நம்பிக்கைதான் கடலை கடப்பதற்கும், மலையை அளப்பதற்கும்
உதவியாக இருக்கிறது –காந்திஜி

குளிக்கரை சிவன் கோவில் மிகவும் கலைகட்டியிருந்தது, அன்று பிரதோஷம் என்பதால் மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் அலைமோதிகொண்டிரிந்தது, நானும் நண்பர்களுடன் அங்கு சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்திற்காக காத்து கொண்டிருந்தேன், அந்தே வேளையில் அர்ச்சகர் எல்லோரையும் விலகி நில்லுங்கள், விலகி நில்லுங்கள், வழிவிடுங்கள் என்று எல்லோரையும் விளக்கிகொண்டிருந்தார், அப்பொழுது நான் கண்ட காட்சி என்னை பிரமிக்க வைத்தது, நண்பன் குமாரை பார்த்து நான் சொன்னேன் அங்க பார்டா, அங்க பார்டா என்று, அதற்கு என் நண்பன் குமார் சொன்னான், என்னடா அங்க ஒண்ணுமே தெரியலே, மீண்டும் நான் அவனை அங்கே , நல்லா பாரு, நல்லா பாரு யார் நிற்கிறது தெரியுதா என்றேன், அதற்கு குமார் என்னை பார்த்து சொன்னான், ஜீவளுக்கு (எங்க ஊரில் என்னை சிவா அல்லது ஜீவல் என்றுதான் அழைப்பார்கள்) பைத்தியம் புடிச்சு போட்சுன்னு நினைக்கிறன், திருவிளையாடலில் வரும் சிவாஜி கணேசன் மாதிரி , நல்லாபாரு நல்லாபாரு என்று சொல்லுகிறான் என்றான். இதை கேட்டவுடன் அடுத்த நண்பன் குணா சொன்னான், குமாரு ஜீவலு சொல்வது சரிதான், நான் இதுவரை பார்க்காத காட்சிடா அது என் கண்ணுக்கு தெரிந்ததுவிட்டது ஆனால் உனக்கு தெரியவில்லையா? என்றான். இதை கேட்டவுடன் குமாருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. என்னடா ரெண்டுபேரும் சேர்ந்து என்னை பைத்தியமா ஆக்கிபுடலாம் என்று திட்டம் போட்டு வந்துருக்கிறீர்களா என்றான். மீண்டும் குமாரிடன் நான் சொன்னேன், கருப்பு தாவணிக்கும், ரோஸ் கலர் தாவணிக்கும் இடையில் யார் நிற்கிறது பார் என்றேன், குமார் பார்த்தவுடனே அந்த உருவம் மறைய தொடங்கியது. அந்த நேரத்தில் குமார், மெதுவாக போய் பார்த்தான், அங்கு போனே உடனே, கத்தினான், ஜீவலு வாடா நான் பிடித்துவிட்டேன், ஓடிவா ஓடிவா என்ற உடனே நானும் குணாவும் ஓடிபோய் மூன்றுபேரும் சேர்ந்து அந்த ஆளை பிடித்து கொண்டுவந்தோம்.

பிடித்து கொண்டுவந்த ஆளு வேறு யாரும் இல்லை , எங்கள் நண்பர் கூட்டத்தில் உள்ள ஒட்டகுடி வேலுபிள்ளை மகன் முருகன்தான் அது.

நண்பன் முருகனை பற்றி சொல்லவேண்டும் என்றால், அவர் உடற்பயிற்சி மன்னன், முற்றிலும் நாத்திகவாதி, கடவுளே இல்லை என்று சதா எங்களை பார்த்து சொல்லிகொண்டிருப்பவர், அவர் படிப்பகத்தில் எந்த நேரமும் புத்தகம் வாசிப்பவர்.

நாங்கள் கோவிலுக்கு போனால் எங்களை பார்த்து கேலி செய்பவர், கோவில் வாசலை அடியெடுத்து வைக்காதவர் , அப்படிபட்டவர், இன்று எப்படி கோவிலுக்கு வந்தார், அதுதான் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது,

எப்பொழுதும் கோவிலுக்கு வராத நீங்கள் எப்படி இன்று மட்டும் வந்தீர்கள் என்று நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் சொன்னார் , இந்த பூஜை முடியட்டும் நான் உங்களுக்கு விபரமாக சொல்கிறேன் என்றார்.அந்த நேரத்தல் கோவில் மணியும் அடித்தது, பூஜையும் நடந்தது, எல்லோரும் சிவனை தரிசித்தோம்.

பூஜை முடிந்து பிறகு நாங்கள் வெளியில் உள்ள இலுப்பை மரத்தடியில் அமர்ந்தோம், அப்பொழுது நாங்கள் முருகனை கேட்டோம், சொல்லுங்கள் முருகன் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? அவர் சொல்ல தொடங்கினார்.

நான் திருநெய்பேரில் உள்ள எங்கள் அண்ணன் வீற்றிக்கு போன வாரம் ஞாயிற்று கிழமை போயிருந்தேன், அந்த ஊரில்தான் என் அண்ணன் வாத்தியாராக வேலை செய்கிறார், அவரிடம் நான் கணக்கு பாடத்தில் உள்ள சந்தேசத்தை கேட்டேன்,அதற்கு அவர் சொன்னார், நீ மாங்குடி போய் சண்முகவடிவேல் வாத்தியாரிடம் கணக்கு கற்றுகொள், வாரத்தில் சனி ,ஞாயிறு இரண்டு நாள் மட்டும் படித்துவிட்டு வா , அவரிடம் இதை பற்றி பேசிவிட்டேன், அதனால் நீ உடனே போய் பாடத்தை இன்று முதல் தொடங்கு என்று சொல்லிவிட்டார்,
அதனால் நானும், அண்ணன் வீற்றிக்கு பக்கத்திலுள்ள மணியும் ஞாயிற்றுகிழமை மாலை நான்கு மணிக்கு சைக்கிளில் புறப்பட்டோம்,வரும் வழியில் நானும் அவனும் பேசிக்கொண்டே வந்தோம், அப்பொழுது அவன் சொன்னான், முருகா நாம டியூசன் முடிந்த உடனே திருவாரூர் போய் தைலைமை திரைஅரங்கில், ஒரு தாயின் சபதம் படம் பார்த்து விட்டு பிறகு வீட்டுக்கு போவோம் என்று சொன்னான்.

அதற்கு நான் சொன்னேன், இல்லடா மணி எங்க அண்ணன் இரவு 9:30 மணிக்குள் திரும்பி வந்திடனும், இல்லையென்றால் உதைப்பேன் என்று சொல்லிவிட்டார். அதனால் நீ மட்டும் போய்வாடா என்று சொன்னேன் அதற்கு அவன் சொன்னான் , முருகா நீ டிக்கெட்டுக்கு காசை பற்றி கவலைபாடாதே நான் எடுக்கிறேன், அது மட்டும் இல்லடா முருகா இந்த படம் இன்று கடைசி நாள் போனால் பார்க்கமுடியாது அதனால நாம டியூசன் முடிந்தவுடன் போறோம் என்றான்.
அதற்கு நான் சொன்னேன், இல்லடா மணி என் அண்ணனுக்கு படிப்புதான் முக்கியம், படம் பார்த்தால் என்னை அவர் அடிப்பார் என்றேன்.

உன் அண்ணனிடன் நான் பேசிக்கொள்கிறேன் என்று மணி சொன்னவுடன் நானும் ஒற்றுகொண்டேன்.

நாங்கள் இருவரும் டியூசன் மாங்குடியில் முடித்துவிட்டு, பிறகு சினிமாவிற்கு திருவாரூர் போய்விட்டோம், நான் படம் பார்க்கும் வேளையில், அண்ணனை நினைத்தது பார்த்தேன் வயிற்றில் புளிகரைத்தது மாதிரி இருந்தது.

படம் விட்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டோம், திருநெய்பேருக்கு போனால் அண்ணன் அடிப்பார், அதனால் நான் குளிக்கரை போய்விடலாம் என்று நினைத்தேன், அதனால் மணியிடம் சொன்னேன், மணி நீ மட்டும் ஊருக்கு போ நான் இப்படியே குளிக்கரை போய்விடுகிறேன் என்றேன், முருகா நான் இருக்கிறேன் நீ பயபடாம என்னோடு வா என்றான், அதனால் நானும் அவனுடன் மீண்டும் திருநெய்பேருக்கு போனேன்.

போகும் வழியில் எனுக்கு பயமாக இருந்தது, அதனால் அவனிடம் சொன்னேன், மணி எனக்கு பயமா இருக்கு, நீ மட்டும் போ, நான் இப்படியே புலிவலத்திலிருந்து குளிகரைக்கு போய்டறேன் என்றவுடன், அவனுக்கு கோபம் வந்து, சரிடா நீ போடா என்று சொல்லிவிட்டான்.

அவனை விட்டுவிட்டு நான் புலிவளத்திலிருந்து வெள்ளகுடி போகும் ரோட்டில் சைக்கிளை விட்டேன், பாதி தூரம் வந்தவுடன் இருட்டை கண்டவுடன் மீண்டும், பயந்துபோய் திரும்பி. மணியை பிடித்துவிடலாம் என்று நினைத்து, வேகமாக சைகிளை ஓட்டினேன், மாங்குடிவரையில் வந்து பார்த்தேன் மணியை காணவில்லை, என்னடா செய்றது வீடிற்கு போனால் அப்பா அடிப்பார், திருநெய்பேர் போனால் அண்ணன் அடிப்பார், இப்படி நினைத்து நினைத்து, பிறகு அண்ணன் வீடிற்கு போகலாம் என்று ஒருமுடிவுக்கு வந்து சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் வந்தவுடம் சைக்கிளில் காற்று இரங்கி விட்டது,

நான் ஒன்னும் செய்யமுடியாமல் அங்கு ஒரு மதகடியில் சைகிளை நிறுத்தி வைத்துவிட்டு, ரோட்டோரத்தில் இருக்கும் மதகடியில் நானும் படுத்து விட்டேன், கொஞ்ச நேரத்தில் நான் உறங்கிவிட்டேன், கனவில் யோரோ என்னை உதைப்பதுபோல் தெரிந்தது, விழித்துப்பார்த்தால் யாரும் இல்லை, நான் மதகு அடியில் இருந்து கீழே விழுந்து இருப்பதை அப்பொழுதான் பார்த்தேன்,மீண்டும் நான் மதகுமேல் படுத்தேன், மீண்டும் யோரோ உதைப்பது போல் உணர்ந்தேன், பார்த்தால் அதேபோல் நான் கீழே விழுந்து கிடந்தேன்.

இது அண்ணன் அடிப்பார் என்ற பயத்தினால் வந்த கனவு என்று நினைத்து மீண்டும் மதகில் தூங்கினால், மீண்டும் யோரோ உதைப்பதுபோல், அதேபோல் நான் கீழே கிடந்தேன் , பயந்து போய் நான், சைகிளை காற்று இல்லாமல் ஓட்டினேன், இரண்டரைமணிக்கு திருநெய்பேருக்கு அண்ணன் வீடிற்கு வந்தால், அண்ணன் தூங்காமல் வாசலில் உர்காந்திருந்தார், என்னை கண்டவுடன் , ஓடிவந்து எங்கடா போனே உன்னாலே எனக்கு தூக்கமே போச்சுடா என்று சொல்லி கன்னத்தில் இரண்டு அரை விட்டார்.

என்னை மன்னிச்சுடு அண்ணன், தெரியாம செய்துவிட்டேன் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்றவுடன், அந்த நேரத்தில் அண்ணி ஓடிவந்து தலைக்கு உயர்ந்த பிள்ளையை அடிக்காதிங்க என்றவுடன், அண்ணன் சமாதானம் ஆனார், பிறகு என் அண்ணி என்னை சாப்பிட சொல்லியது, சாப்பிடும் வரை அண்ணனும் தூங்காமல் விழித்துகொண்டிருந்தார், நான் சாப்பிட்டு முடித்தவுடன், பேனா நோட்டு எல்லாம் எங்கே என்று கேட்டார், அப்பொழுதான் எனக்கு ஞாபகம் வந்தது , மதகு கட்டையில் தூங்கும் பொழுது அங்கேயே விட்டுவந்தது.நோட்டை தலைக்கு வைத்து தூங்கியதால், வரும்பொழுது அங்கேயே விட்டு வந்து விட்டேன். பரவாயில்லை நாளைக்கு போய் எடுத்துகொள்வோம், நீ படுத்து தூங்கு என்றவுடன் நான் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில் நான் எழுந்தவுடன் அண்ணன் சொன்னார் , முருகா உடனே கிளம்பு , சைக்கில் பஞ்சர் ஆகிவிட்டது , அதனால நீ என்னோடு ஸ்கூட்டரில் வா உன்னை திருவாரூரில் விட்டுட்டு நான் பிறகு பள்ளிக்கூடம் போறேன் என்றவுடன், பிறகு நானும் அவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டோம், வரும் வழியில் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம், அப்பொழுது அண்ணன் சொன்னார், மணி ராத்திரி வந்து சொன்னான், சினிமாவுக்கு போன விஷயத்தை

தம்பி நீ சினிமாவிற்கு போகவேண்டாம் என்று நான் சொல்லல, நைட் சோ போகாதே , இன்னும் ஒரு மாசத்துலே பொது தேர்வு வருகிறது, அதனால நீ நல்லா படிக்கணும், நம்ம குடும்பத்தில் யாரும் கஷ்டப்படக்கூடாது, அதுதான் என் எண்ணம், புரிஞ்சுதா, ராதிரிவேற உன்னை நான் அடிச்சுபுட்டேன், அத நீ மனசுல வசிக்காத, படிப்புல கவனமாக இருக்கணும் என்றார்சரி அண்ணே என்றேன்,
நாங்கள் பேசிக்கொண்டே வந்தபொழுது என்னை அண்ணன் கேட்டார், ராத்திரி எங்க படுத்துயிருந்த அந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா, என்று கேட்டவுடன்
நான் சொன்னேன், மாங்குடியில ஒரு இரட்டை பனைமரம் பேருந்து நிறுத்தத்திற்கு பக்கத்தில் உள்ள மதுகடியில் என்று சொன்னவுடன், அவர்சொன்னார், தெரியும், தெரியும், புரிஞ்சுகிட்டேன் என்றார்,

ஸ்கூட்டர் சொஞ்ச தூரம் வந்தவுடன், அண்ணன் சொன்னார், என்னடா முருகா, அங்க பார்த்தியா நீ படுத்திருந்த இடத்தில மக்கள் கூட்டம் அதிகமா நிற்கிறது என்றார் நானும், ஆமாம் அண்ணே அங்கதான் நான் படுத்து இருந்தேன், வாடா போய்ப்பார்ப்போம் என்றவுடன் நானும், அண்ணனும் ஸ்கூட்டரில் இருந்து இறங்கி அந்த கூட்டத்தை விளக்கி பார்த்தால் , நான் படுத்திருந்த மதில் கட்டையில் ஒரு லாரி மோதி, மதில் கட்டை உடைந்து, லாரி தலைகீழாக வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்தது, அதை பார்த்தவுடன் எனக்கு மனசு படபடன்னு அடித்துகொண்டது, அந்த நேரத்தில் என் அண்ணன் என்னை கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார் நானும் அழுதுவிட்டேன், நான் அன்று அங்கே தூங்கி இருந்தால், நான் இன்று உங்களோடு பேசிகொண்டிரிக்க மாட்டேன் என்றவுடன் நாங்களும் , முருகனை கட்டி பிடித்துகொண்டோம்.

இது நடந்த கதை என் மனதை மிகவும் பாதித்தகதை. இதில் கொஞ்சம் நான் இட்டு கட்டி எழுதியிருக்கிறேன், அதாவது மனதில் இட்டு , கட்டி வைத்திருந்ததை, அவிழ்த்து விட்டிருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு மன மாற்றம் வரும் அது ஏதோ ஒரு சம்பவத்தில் வரலாம், இதுபோல் உங்கள் மனதை பாதித்த சம்பவம் இருந்தால் எனக்கு எழுதி அனுப்பவும்.
அன்புடன்
ஜீவா

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிகவும் நன்றாக இருந்தது ஒரு கதையின் அமைப்பு அதில் நிறைய இயல்பு வாக்கியங்கள் பயன்படுத்துங்கள் உதாரணமாக "ஓற்றுக்கொள்ளுங்கள்"
என்பதை ஒத்துக்கொள்ளுங்கள் என்றே எழுதுங்கள், சாதாராணமாக பேசும் போது உள்ளது போன்ற சொற்களை பயன் படுத்துங்கள்

Tech Shankar சொன்னது…

அடடா.. வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அப்படியே கண்முன் வடிக்கிறீர்களே. நல்ல படிப்பினை. நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

அண்ணனிடம் அடி வாங்கியதும் நன்மைக்கே. அந்த மதகின் அடியிலேயே படுத்திருந்தால் என்ன ஆவது? கடவுளுக்கு நன்றி.