உங்கள் அன்புடன் இந்த வலைப்பதிவில் முகம்பதிக்கிறேன் இந்த அன்புடன் ஜீவா. நாம் எல்லோரும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை எல்லாம் அவன் செயல் என்று அதனால் அவனையும் வணங்கி, உங்களுக்குள் அவன் இருப்பதால் உங்களையும் வணங்கி இன்று முதல் எழுத ,தொடங்குகிறேன் அவன் இன்றி நான் இல்லை, உங்களுக்குள் அவன் இல்லாமலும் இல்லை. அதனால் கடவுளும், நானும் என்ற தலைப்பில் முதலில் தொடங்கும் இந்த உரையாடலை படித்து பாருங்கள்.
கேள்வி படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்,
அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்- மகரிசி
கடவுள் : குழந்தாய் ஏன் என்னை அழைத்தாய்?
நான் : உன்னிடம் நான் சில கேள்விகளை கேட்க்கவேண்டும்?
கடவுள் : எதை கேட்பதாக இருந்தாலும் 27 நிமிடத்தில் கேள்.
நான் : அது என்ன 27 நிமிடம்?
கடவுள் : மிகவிரைவில் அதை நீ புரிந்துகொள்வாய்1
நான் : இந்த பிரபஞ்சமும் , உயிரும் எப்படி தோன்றின?
கடவுள் : கருமை படலத்தில் (இருட்டு பகுதியில்) பல ஆயிரும் கோடி வருடங்களுக்கு முன்பு மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதி-(Big Bank) வெடித்து சிதறி இந்த பிரபஞ்சமும், உயிரும் தோன்றின, இதை நான் முழுமையாக விளக்க வேண்டும் என்றால் இந்த 27 நிமிடம் போதாது, உனது ஆயுள் முழுவதும் இதை விளக்க வேண்டிவரும், இது ஒரு சின்ன விஷயம் இல்லை, இது மிகபெரிய உருமாற்ற தொடர்கதை. இதையெல்லாம் செய்தது நான் என்று சொன்னால், ஒன்றோடு ஓன்று மோத விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் உன் வேலையா என்று என்னை கேட்பாய். அப்படி நான் செய்யவில்லை என்றால் நீ இப்பொழுது கேள்வி கேட்க முடியாது தெரியுமா.?அதனால் உனக்கு முக்கியமான, பயனுள்ள சில கேள்விகளை மட்டும் கேள்.
நான் : ஆத்மா, மறுபிறவி உண்டா தெளிவாக விளக்கவும்?
கடவுள் : குழந்தாய்! தெளிவாக விளக்கவேண்டுமா, இதை நன்றாக கேட்டு புரிந்துகொள், “இல்லாமல் இருந்துகொண்டிருந்தது , இல்லாதது இருந்துகொண்டிருப்பது, இருந்தது இல்லாமல் இருந்துகொண்டிருப்பது.”
நான் : இறைவா! எனக்கு தலை சுற்றுகிறது ஒன்றும் புரியவில்லை, பாட்டாக சொல்லாமல் உரைநடையாக சொல்.
கடவுள் : குழந்தாய்- திருவள்ளுவரும் , சில சித்தர்களும், பாட்டாக பாடினால் மட்டும் புரியும் ஆனால் நான் மட்டும் உரை நடையாக சொல்லவேண்டுமா, நான் சொன்னதை எழுதிவைத்து ஒன்றுக்கு நாலு தடவை படித்துபார்த்து புரிந்துகொள்., நேரம் போகிறது (27 நிமிடம்) அடுத்த கேள்விக்கு வா.
நான் : ஏன் இந்த பூமியில் சில மத, சாதி சண்டைகள், பூகம்பம், சுனாமி வருகிறது, அதை எல்லாம் நீ மேல இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய் ,இங்கு நடப்பதை எதுவுமே நீ ஏன் கண்டுகொள்வதில்லை?
கடவுள் : என்ன! நீ சொல்வது எல்லாம் உண்மையா? நான் மேலே இருந்து பார்த்து கொண்டிருக்கிறேனா? இது ஒன்றுமே எனக்கு தெரியாதே.
நான் : இறைவா! என்ன சொல்கிறாய்? அப்ப நீ எங்கு தான் இருகிறாய் சொல்? நீ தூணிலும் , துரும்பிலும் இருப்பதாக சொன்னார்களே!
கடவுள் : குழந்தாய், நான் தூணிலும் , துரும்பிலும் இருப்பதாக சொன்னால், நீ உன்னை மறந்து விட்டு, அங்கே போய் தேடுவாய், அந்த நேரத்தில் உன்னிடம் உள்ள உடைமைகளை சில பேர் எடுத்துகொண்டு போய்விடுவார்கள், அதுபோல் வேறு மனிதர் வந்து உன்னிலும்,என்னிலும் இருப்பதாக சொன்னால்,அப்பவும் உன்னை மறந்துவிட்டு மற்றவரிடம் நான் இருக்கிறேனா என்று தேட போவாய், அப்படி தேட போனால் அங்கு என்னை மட்டும் அல்ல, உன் உடைமைகளையும் நீ தேடி கொண்டுதான் இருப்பாய்.
நான் : கடவுளே! எங்குதான் இருக்கிறாய்?
கடவுள் : நான் மேலே தான் இருக்கிறேன், ஆனால் நான் மேலே போனதற்கு காரணம் நீங்கள் தான்?
நான் : என்ன சொல்கிறாய் நீ மேலே போனதற்கு நாங்கள் காரணமா?
கடவுள்: ஆமாம், நீங்கள் எப்ப பார்த்தாலும் , மேலே உள்ளவன் பார்த்துக்குவான், மேலே உள்ளவன் பார்த்துக்குவான் என்று நீங்கள் சொல்ல அதை கேட்டு கேட்டு எனக்கு புளித்துபோய், வெறுத்து போய் , உங்களோடு இருந்த நான் மேலே வந்துவிட்டேன்.
வேறு ஒரு காரணமும் இருக்கு குழந்தாய், நீண்ட காலமாக உங்களையும், பிரபஞ்சத்தையும் படைத்த எனக்கு ஓய்வு வேண்டாமா? நீங்கள் எட்டு அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை செய்துவிட்டு வந்து நன்றாக ஓய்வு எடுக்கிறீர்கள் நான் மட்டும் ஓய்வு எடுக்க கூடாதா?
நான் : கடவுளே என்னை மன்னித்துவிடு உன்னை தொந்தரவு செய்துவிட்டேன்.
கடவுள் : நீ என் குழைந்தை, நீ என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லவேண்டியது என் கடமை அதனால் பயப்படாதே குழந்தாய்.
நான் : அப்ப உனக்கு இங்கு பூமியில் நடப்பது ஒன்றும் தெரியாதா, நீ மேலே இருந்து பார்க்க முடியாதா?
கடவுள் : இத்தனை கேள்விகளையும் கேட்கிறாயே நீ எங்கிருந்து கேட்கிறாய்?
நான் : அபுதாபியில் இருந்துதான்?
கடவுள் : அது தான் நீ பிறந்த ஊரா?
நான் : இல்லை, நான் பிறந்த ஊர் புலியூர் இந்தியா.
கடவுள் : புலியுருக்கும் அபுதாபிக்கும் எத்தனை தூரம், பக்கமா?
நான் : இல்லை மூன்று ஆயிரம் கிலோமீட்டர், மிகவும் தூரம், கால்நடையாக வரமுடியாது அதனால், நான் விமானம் என்னும் பறக்கும் ஒரு சாதனம் உள்ளது அதன்மேல் ஏறி பறந்துவந்தேன், அது பெட்ரோல் என்னும் திரவத்தால் பறக்க கூடியது, அந்த பெட்ரோலை நாங்கள் பூமியில் துளையிட்டு (Drill Machine ) கண்டு பிடித்தோம், உனக்கு விமானத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்பதற்காக சொன்னேன், அது பறந்தால் மிக உயரத்தில் பறக்கும், மேலே வந்து விட்டால் கீழே நடப்பது ஒன்றும் தெரியாது.
கடவுள் : விமானத்தில் வரும்பொழுது,மேலே இருந்து பார்த்தால் கீழே நடக்கும் நிகழ்வுகளையும் ,சண்டைகளையும் உன்னால் பார்க்க முடியாது என்று சொல்கிறாய் அப்படிதானே?
நான் : அப்படித்தான் பார்க்கமுடியாது?
கடவுள் : அதே போலதான் மேலே இருக்கும் என்னாலும் பூமியில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கமுடியாது.
நான் : இறைவா! என்ன சொல்கிறாய், அப்படியென்றால் பூமியில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் யாருடைய கட்டுப்பாட்டில் நடக்கிறது?
கடவுள் : நீங்கள் ஒன்று சொல்வீர்களே, Man Based , System Based அதுபோல் இது Nature based முற்றிலும் இயற்கையின் கட்டுப்பாடில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன், அதனால், நீங்கள் என் படைப்பாகிய இயற்கையை தூண்டினால் அது உங்களை தண்டிக்கும், அதனால் நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளவும்.
நான் : இப்பொழுது மனித குலத்திக்கு புதிய புதிய நோய் வருகிறது, எயிட்ஸ் போன்ற நோய்கள் அது எப்படி வந்தது அதை போக்க வழியில்லையா? தெளிவாக சொல்லவும், தெளிவாக என்றால், முன்பு சொன்னதுபோல், இருந்தது போனது என்று கவிதைநடை வேண்டாம்,
கடவுள் : நீங்கள் பெட்ரோல் எப்படி கண்டு பிடித்தீர்கள், துளைபானை வைத்து பூமியில் என்ன இருக்கும் , என்ன இருக்கும் என்று துளையிட்டு தேடியதால் பெட்ரோல் கிடைத்தது, அது போலதான் நீங்கள் கண்டு பிடித்த எயிட்ஸ் நோயும்.
நான் : பெட்ரோலை பற்றி எப்படி உனக்கு தெரியும்?
கடவுள் : நீதான் அபுதாபி எப்படி வந்தாய் என்று விளக்கியது, அப்பொழுது சொன்னதுதான் இந்த பெட்ரோல் கதை புரியுதா?
நான் : அட கடவுளே!
கடவுள் : நான் தான் இருக்கிறேனே ஏன் அழைகிறாய்?
நான் : இல்லை நேரம் முடிய இன்னும் 5 நிமிடம் தான் இருக்கிறது அதான்.
கடவுள் : அதனால் உடனே கேள்வியை கேள்?
நான் : இந்த பூமி இன்னும் 35 வருடத்தில் சூடேறி அழிய போகுதாமே? அதற்கு எதாவது மாற்று வழி உண்டா? அதுபோல் பூமி சுடேருவதை தடுக்க வழி சொல்லவும்? உன்னை நான் அடைய என்ன வழி?
கடவுள் : நேரம் கொஞ்சமாக இருக்கிறதால ஒரு கேள்விக்குள் மூன்று கேள்விகளை கேட்டுவிட்டாய் பலே கில்லாடி குழந்தாய் நீ.
பூமி சுடேருவதை தடுக்க, நீங்கள் கண்டுபிடித்த விமானத்தை வைத்து எல்லா இடத்திலும் மாட்டு சாணத்தை குண்டு போடுவதுபோல் போட்டு , மண் தன்மையை மாற்றி , மரங்கள் பயிரிட்டு , காட்டை வளர்க்கவும், பிறகு பச்சையாக காய்கறிகளையும், பழங்களையும் , உணவாக சாப்பிடவும், உங்கள் ஆறாவது அறிவை கொண்டு , சமைக்காமல் சாப்பிட வழியை கண்டு பிடிக்கவும். ஒரே வழி மீண்டும் நீங்கள் ஆதிவாசி ஆகிவிடுங்கள். நடக்காத காரியம் என்று தெரிந்து தான் உங்களுக்காகவே அடுத்த பூமியாக்க நிலவை கொடுத்து உள்ளேன். பூமி பழுதடைந்து போனால் அடுத்த பூமி நிலவுதான் ,அதையும் நாசம் செய்தது விடாதிர்கள் (Moon is Stepni of Earth )
என்னை அடைய வழி, உழைப்பு என்னும் வண்டியில், அன்பு என்னும் மாட்டை பூட்டி, சத்தியம் என்னும் பாதையில், வாழ்க்கை என்னும் பயணத்தை தொடர்ந்து வா , வழியில் தர்ம சத்திரத்தில் இறங்கி, புண்ணிய நீர் குடித்து வந்தால், நீ என்னை பார்க்க முடியும்
நான் : இத்தனை கேள்விகளுக்கும் அழகாக பதில் சொன்னியே உனக்கு தமிழ் இங்கலிஷ் தெரியுமா?
கடவுள் : நீ எந்த பாசையில் கேள்வி கேட்டாய்?
நான் : தமிழ் பாசையில்தான்?
கடவுள் : குழந்தாய் நீ எந்த பாசையிலும் கேட்க்கவில்லை நீ கனவு கண்டுகொண்டிருக்கிறாய். உடனே எழு இப்பொழுது அலாரம் அடிக்க போகிறது என்று கடவுள் சொன்னவுடனே என் கடிகாரத்தில் அலாரம் அடித்தது.
அலாரம் அடித்து விழித்து கொண்டது நான், நீங்கள்?
உங்கள் நல் ஆதரவோடு உங்களில் நான்
அன்புடன்
ஜீவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
மிக நன்றாக இருக்கிறது, புரிந்தும் புரியாமலும் இருக்கிறது சில இடங்களில், அது ஒருவகையில் உங்கள் ஆழமான புரிதல் நகைச்சுவையுடன் கூடிய கதைபோன்ற அமைப்பு, இறைவன் தனக்குள்ளே இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள உதவும் ஒரு பதிவு.
இறைவன் தனக்குள்ளே இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள உதவும் ஒரு பதிவு.நன்றி திரு.செல்வம் அவர்களே நீங்கள் மிக அழகாக புரிந்துகொண்டீர்கள்,கடவுளை எல்லோரும் வெளியில் தேடுகிறார்கள், அவர்களுக்காக மட்டும் இந்த பதிவு.
அன்புடன்
ஜீவா
balavin thiraipadangalipol purinthum, puriyamalum irukirathu,
Muruga
hi jeeva, i chk and read ur site,
its very nice, put some good mess and some political news and cinema news also.
take care
sudhaker
உங்கள் பகிர்விற்கு நன்றி அண்ணாச்சி..
ஆஹா... வாழ்க்கையின் தத்துவத்தை இப்படி சில வரிகளில் அற்புதமாக கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே.நிச்சயமாக மானிடம் மண்ணுலகை அதிகமாகவே ஆழப்படுத்தி,காயப்
படுத்தி அதனால் காயப்பட்டும் நிற்கிறது.
இறைவன் நம்முள்ளில் தானிருக்கிறான் என நானும் எழுதியது எனது ஆரம்ப பதிவுகளில் ஒன்று.(இரண்டாவது பதிவு) 2008 செப்டம்பர் இடுகையில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.
கருத்துரையிடுக