செவ்வாய், 10 மார்ச், 2009

ஹைக்கூ கவிதை

எல்லோரும் ஹைக்கூ கவிதை எழுதுகிறார்களே நாமும் எழுதி பார்போம் என்று முயன்றதன் விளைவுதான் இந்த ஹை கூ கவிதை தொகுப்பு, எப்படி எழுதவேண்டும் என்று கற்று கொடுத்தது நண்பர் திரு.தவநெறிசெல்வம் அவர்கள், உதாரணம் காட்டியவர் முருகவேல் அவர்கள். அதனால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூறி தொடங்குகிறேன்,

சும்மா இருப்பதைவிட பயனற்ற முயற்சியாவது செய்வது மேல்-லெனின்

வெட்டியவன் வரலாற்றை
வெட்டு பட்டவன் சொல்கிறான்
கல்வெட்டு

உடல் முழுவதும் பார்த்தான்
உயிர் நீங்களாக
கசாப்பு கடைக்காரன்

கைகள் பந்தியிலே
உடல் பந்தலிலே
வாழைமரம்

எல்லோருக்கும் ஊட்டிவிட்டு
தான் மட்டும் பட்டினியாய்
கை

கேவலமாக பார்க்கும் இவனை
காசு கொடுத்து வாங்குகிறார்கள்
தலைமுடி

அழும் இவனை கையில் எடுத்தால்
அழுகையை நிறுத்துவான்
Land phone

கிணற்று தவளை
பேசும் தவளை
நாக்கு

அசையும் இவனுக்கு
அசையாமல் வணக்கம்
தேசியக்கொடி

வெட்டியவனை
அழவைப்பான்
வெங்காயம்

ஒரு ஊமை
பாடம் சொல்லி தருகிறது
புத்தகம்

கருப்பு குடையில்
ஓட்டைகள்
நட்சத்திரம்

முழு நிலவுக்குள்
சிறு சூரியன்
குங்குமம்

தப்பு செய்தால்
அழித்திடுவான்
ரப்பர்

சூரியனை சுற்றாத கோள்
பேப்பரை சுற்றும் கோள்
எழுதுகோல்

சாலையில் உன்பேட்சை கேட்காதாவன்
எமன் பேச்சை கேட்பான்
வேகம்

மதிக்காவிட்டாலும்
வீட்டு வாசல்வரை வருவான்
காலனி

பஞ்சபாண்டவருக்கு மகுடம்
வளரும் கீரிடம்
நகம்

பேச, நடக்க தெரியாத உனக்கு
கைகட்டு, கால் கட்டு
பிணம்

உள்ளதை கொண்டுவரும் உனக்கு
கழுத்திலே சுருக்கு
வாலி

உன் உள்ளே என்னை காடும்
காதலி நீ
கண்ணாடி

தினம் உன்னை பார்த்தால்
வயது கூடுகிறது
நாள்காட்டி-Calendar

உதைத்து உள்ளே அனுப்பியவனுக்கு பரிசு
உதை வாங்கி உள்ளேபோனவன்
கால்பந்து

அடிவாங்கியவன் ஓடினால்
அடித்தவனும் ஓடுகிறான்,
கிரிக்கெட்

வேலி தாண்டி குதித்து
விளையாடும் பூசணிக்காய்
வாலிபால் (volleyball)

வண்ணபூக்களை வட்டமிடும்
வண்ண பூ
Butterfly

சத்தமில்லாத விமானம்
வானத்தில் வட்டமிட்டது
பருந்து

புதைகுழியில் மாட்டிக்கொண்டு
சிறகடிக்கும் கருவண்டு
கண்

உடையவனிடம் நடைபோட்டு
உலாவருபவர்கள்
கால்கள்

சொந்தவீட்டு சுவரில் மோதியதால்
தலையில் தீ
தீ குச்சி

உழைப்பவன் உடலில்
உற்பத்தியாகும் கடல்
வியர்வை

எல்லோருக்கும் வழிகாட்டிவிட்டு
நான் மட்டும் நடு வீதியில்
வழிகாட்டி(Signboard)

என்னிடம் கற்றுகொண்டவனுக்கு அயல் நாட்டில் வேலை,
எனக்கோ அலமாரி சிறை
புத்தகம்

அன்புடன்
ஜீவா

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிக அற்புதமான ஹைக்கூ கவிஞராக உருமாறிக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பதிவை www.tamilish.com ல் இணைத்துள்ளேன், அதில் அதன் தலைப்பு "வெட்டுப்பட்டவன் சொல்கிறான்" சென்று பாருங்கள்

ஜீவா சொன்னது…

மிக்க நன்றி திரு.செல்வம் அவர்களே
அன்புடன்
ஜீவா

பெயரில்லா சொன்னது…

ஹைக்கூ உங்களுக்கு நன்றாகவே வருகிறது...

உடல் முழுவதும் பார்த்தான்
உயிர் நீங்களாக
கசாப்பு கடைக்காரன்

தப்பு செய்தால் அழித்திடுவான்..
இரப்பர். (அழிப்பான்)

இந்த இரண்டும் நான் வெகுவாய் இரசித்தேன்..

ஹைக்கூக்கள் எழுத விரும்பிவிட்டால், நிறைய படிக்கவும் வேண்டும், நிறைய வித்தியாசமான சிந்தனைகள் கிடைக்கும்!!

என் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

உங்கள் ஹைக்கூ 9 ஓட்டுக்களை தமிலிஷ் தளத்தில் பெற்றுள்ளது
வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

ஜீவா தங்களின் வலை பதிவை பார்த்தேன் மிகவுன் நன்றத இருந்தது

அன்புடன்
சுதாகர்

பெயரில்லா சொன்னது…

ஜீவா தங்களின் வலை பதிவை பார்த்தேன் மிகவுன் நன்றத இருந்தது

அன்புடன்
சுதாகர்

sakthi சொன்னது…

alagana hykoo thokupu

sakthi சொன்னது…

alagana hykoo thokupu

mohana ravi சொன்னது…


ஒட்டாதே வாசலில் போஸ்டர்

ஓ மந்திரியின் பிறந்தநாள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒரு ஊமை
பாடம் சொல்லி தருகிறது
புத்தகம்//
Interesting.