சனி, 14 மார்ச், 2009

எப்படி வந்தது குண்டக்கமண்டக்க, ஒக்கமக்கா

நாம் அன்றாடம் காணும் சினிமாவிலும், மற்றும் சமுதாயத்திலும் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தை ஒக்கமக்கா, குண்டக்கமண்டக்க, அதுபோல் கொய்யால மற்றும் டகால்டி என்ற வார்த்தைகள் எப்படி வந்தது என்று பார்போம், இது ஒரு கற்பனைதான், எந்த அகராதியில் கண்டு பிடித்தாய் என்று தயவு செய்து கேட்க கூடாது, கற்பனை பொருத்தமாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.

குண்டக்கமண்டக்க, ஒக்கமக்கா

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தது ஒரு குண்டான பெண்பிள்ளை, இரண்டாவது ஒல்லியான பெண்பிள்ளை ,மூன்றாவது ஆண் பிள்ளை, இந்த மூன்றுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தார்கள், இவர்கள் எப்பொழுதும் பள்ளிக்கூடம் போனால் ஒன்றாகத்தான் சேர்ந்து போவார்கள். இதில் அதிக புத்திசாலி ஒல்லியானபெண், மூத்த பெண் நன்றாக படிக்காது, அதனால் அந்த பெண்ணை எல்லோரும் மண்டு என்றுதான் சொல்வார்கள், பள்ளிகூடத்தில் கேள்வி கேட்டால் தவறாகத்தான் பதில் சொல்லும், ஆனால் இரண்டாவது பெண் நன்றாக பதில் சொல்லும், ஒருநாள் இரண்டாவது பெண் ஆசிரியர் கேள்வி கேட்கும் பொழுது தவறாக பதில் சொல்லிவிட்டது, அதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், உங்க அக்கா குண்டு அக்கா மண்டு அக்கா மாதிரி பதில் சொல்லாதே என்று ஆசிரியர் சொல்ல , அது முதல் அது மருவி குண்டக்க மண்டக்க (குண்டு அக்கா மண்டு அக்கா) என்று ஆகிவிட்டது, இதுதான் குண்டக்க மண்டக்க கதை, அது மாதிரி ஒக்கமக்க எப்படி வந்தது என்றால், அந்த குண்டான அக்காவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள், அந்த அக்கா ஒருமுறை மாப்பிள்ளையோடு வீட்டிற்கு வந்து இருந்தபொழுது , மாப்பிள்ளை ஏதோ கேள்வி கேட்க்க அதற்கு பதில் தெரியாமல் அந்த பெண் நின்றுகொண்டிருந்தது, அப்பொழுது அந்த வீட்டில் உள்ள பையன் சொன்னான் பெரியக்காவிற்கு ஒன்றும் படிக்கத்தெரியாது மண்டு அக்கா என்று மாபிள்ளை இடம் சொல்ல, அதை கேட்ட அந்த மாப்பிளை ஆச்சிரியத்தோடு, உங்க அக்கா மக்கா!! என்று கேட்டு இருக்கிறார், உங்க அக்கா மக்கா என்றது மருவி ஒக்கமக்க என்று ஆகிவிட்டது..


அதுபோல் கொய்யால மற்றும் டகால்டி எப்படி வந்தது என்று பார்போம்,

கொய்யால

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள், அம்மாவுடைய அப்பாவை அய்யா என்றுதான் சொல்லுவார்கள். அப்படி ஒரு அய்யா இருந்தார், அவர் மிகவும் கண்டிப்பானவர், தன் பேர குழந்தைகளை தன் கட்டுபாட்டில் வளர்ப்பவர், அவருக்கு ஒரு பேரன் இருந்தான், அவன் எப்பொழுதும் மறைமுகமாக பீடி குடிப்பான், ஒரு நாள் அந்த பையனும், அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து வயல் வெளியில் பீடி குடித்துகொண்டிருந்தார்கள், அப்பொழுது அந்த கூட்டத்தில் ஒருவன் அவனை பயமுறுத்துவதற்காக, ஏலே உங்க அய்யா வர்ரார்லே, என்று அவனை பயமுறுத்தினான், அவன் பயந்துபோய் பார்த்தான், அதே போல் இரண்டு தடவை அவனை பயமுறுத்தினான், அதற்கு அவன் பயப்படவில்லை,அந்த வேளையில், அவனுடைய அய்யா பின்புறமாக வந்தார், அந்தநேரத்தில் அவனுடைய கூட்டாளி ஒருவன் அவனுடைய அய்யா வருவதை பார்த்தவுடனே, பதட்டத்தில் உங்க அய்யாலே என்பதற்கு பதிலாக கொய்யாலே என்று சொல்லிவிட்டு ஒட்டிவிட்டான், பின்பு அவன் மாட்டிகொண்டன், அவனை அவர் அய்யா கம்பை (கொம்பை) எடுத்து விளாசு, விளாசுனு, விளாசிவிட்டார், அன்று முதல் அவனை கொய்யாலே என்றால் பயபுடுவான். பயமுறுத்துவதற்காக சொன்ன வார்த்தை தான் கொய்யாலே, இப்பொழுது புரிந்துவிட்டதா உங்களுக்கு

டகால்டி

கோயமுத்தூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வெட்டி பயல் இருந்தான், அவன் எப்பொழுதும் டீ கடையில் உர்கார்ந்துகொண்டு, OC டீ குடிப்பதுதான் வேலை, ஊரில் நடக்கும் எல்லா செய்திகளையும், அவன் அந்த டீ கடையில் வந்து சொல்லுவான், அவனுக்கு டீ வாங்கி கொடுத்தால் போதும், உடனே அவன் ஊரில் நடக்கும் சில கதைகளை அவிழ்த்துவிடுவான், ஒருநாள் டீ கடைகாரர் கேட்டார், என்னடா நேத்து நம்ம ஊரிலே அடிபிடி சண்டையாமே, அது எதனால் வந்தது, சொல்டா என்றார், உடனே அவன் டகால்ன்னு ஒரு டீயை போட்டு குடு நான் சொல்றேன் என்றான், அந்த நாள் முதல் அவன் வந்தால் அவனை, டகால்ன்னு டீயை வாங்கி குடிக்கிற பார்டி வந்துவிட்டான், என்பார்கள், ஓசியில் டகால்ன்னு டீ வாங்கி குடிப்பதால் அதுமுதல் அவன் டகால்டீ பார்டி ஆகிவிட்டான்.

இப்படித்தான் இந்த உங்க அய்யாலே என்பது கொய்யாலே ஆனது, டகால்ன்னு டீ வாங்குவதாலே- டகால்டீ ஆகிவிட்டது, குண்டு அக்கா, மண்டு அக்கா, -குண்டக்க மண்டக்க ஆனது, உங்க அக்கா மக்கா என்பது ஒக்கமக்க ஆகிவிட்டது.

நன்றி நண்பர்களே உங்களுக்கு வேறு எதை பற்றியும் தெரியவேண்டும் என்றால் எனக்கு எழுதி அனுப்பவும், நான் கண்டுபிடித்து தருகிறேன், இப்பொழுது புரிகிறதா தமிழ் மொழியை பற்றி- தமிழ் எங்கள் உயிர்

அன்புடன்
ஜீவா

8 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

கற்பனை அல்ல. நிஜம் போல் உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்

எட்வின் சொன்னது…

;) மெய்யாலுமே வா ! ம்ம்ம்ம்

எட்வின் சொன்னது…

"எடக்கு மடக்கு" என்னனு கேட்டு என் பதிவில் போட்டிருக்கிறேன்... இந்த link ல் பார்க்கவும் http://thamizhanedwin.blogspot.com/2009/03/blog-post_16.html

லோகு சொன்னது…

இப்பத்தா தெரியுது.. ஏன் தமிழ செம்மொழி ஆக்குனாங்கனு..

அருமை..

பெயரில்லா சொன்னது…

நன்றி கருத்துக்கு தொடர்ந்து எழுதுங்கள்

Tech Shankar சொன்னது…

அடடா..

என்ன இது.. எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..

சூ ப் ப ர்

vijaya T.rajendar சொன்னது…

நன்றாக உள்ளது , வாழ்த்துக்கள்

பின்னோட்டத்திற்கு

//அருமையான பதிவு, ஒரு மனிதனுக்கு விடா முயற்சி இருந்தால், அவன் நினைத்ததை சாதிப்பான் என்பது நிட்சயம், வாழுத்துக்கள் //

நன்றி ஜீவா

வல்லிசிம்ஹன் சொன்னது…

உண்மைதானா. கட்டு உரையா:)
நல்லாவே இருக்கு. வாழ்த்துகள்.